Election bannerElection banner
Published:Updated:

அஸ்ஸாம்: பாஜக வேட்பாளர் காரில் இ.வி.எம் மெஷின் - 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

காரிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்
காரிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் பகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஒருவரின் காரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தேர்தல் சமயத்தில் பணப்பட்டுவாடா, மோதல், கலவரங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் மிகத் தீவீர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் பகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஒருவரின் காரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பாலுவுக்குச் சொந்தமான, AS 10B 0022 பதிவெண் கொண்ட வெள்ளை நிற பொலேரோ காரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் வீடியோவை ``அதானு புயன்” என்ற பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதை காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பிற அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் குறிப்பிட்டு ``இது பாஜக-வின் வாக்கு இயந்திரத்தைக் கைப்பற்றும் உத்தி” என விமர்சித்துவருகின்றனர்.

இது குறித்து, அந்த வாக்குச்சாவடிக்கான தேர்தல் பொறுப்பாளர், ``வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு மையத்துக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களைக் கொண்டு செல்லும்போது கார் பழுதடைந்ததால், அந்த வழியாக வந்த மற்றொரு காரில் லிஃப்ட் கேட்டு எடுத்துச் சென்றோம். அந்த கார் பா.ஜ.க வேட்பாளருடையது என்று எங்களுக்குத் தெரியாது” என தனியார் ஆங்கில ஊடகத்துக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

திமுக நிர்வாகிகள் வீடுகளில் ஐ.டி ரெய்டு; செக் வைக்கும் டெல்லி - 5 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தமா?

இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு தேர்தல் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். மேலும், மின்னணு வாக்கு இயந்திரத்தின் சீல் சேதப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் தேர்தல் ஆணையம், ரடாபரி தொகுதியில், இந்திரா எம்.வி பள்ளியில் 149 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவரும் நிலையில், அஸ்ஸாமில் நடந்த இந்தச் சம்பவம் அந்தக் கேள்வியை வலுவாக்கியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு