Published:Updated:

அதிரிபுதிரி உதிரி!

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் பா.ஜ.க அல்லாத கூட்டணிக்குத்தான் வாக்களிப்பது வாடிக்கை.

அதிரிபுதிரி உதிரி!

சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் பா.ஜ.க அல்லாத கூட்டணிக்குத்தான் வாக்களிப்பது வாடிக்கை.

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

மோடி படத்துடன் கொடி!

தேர்தல் திருவிழா வந்துவிட்டாலே நாட்டில் புதுப்புது கட்சிகள் உருவாகத் தொடங்கும். 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி சீமானிடமிருந்து பிரிந்து மன்சூர் அலிகான் ஒரு கட்சியைத் தொடங்கினார். ரஜினியால் ஏமாற்றமடைந்த அர்ஜுனமூர்த்தி புதுக் கட்சியைத் தொடங்கினார். இந்தநிலையில், பிரதமர் அலுவலகத்துக்கு அவுட்சோர்ஸிங் முறையில் பணிகளைச் செய்து கொடுக்கும் ‘மைக்ரோஸ்டாட்’ என்ற தனியார் நிறுவனத்தின் உயரதிகாரியாக இருக்கும் டாக்டர் வேதா என்பவர், ‘வேதா பேரவை’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார். 2ஜி வழக்கின் குற்றப்பத்திரிகையில் முக்கியமான தகவல்கள் அடங்கிய ஐந்து பக்கங்கள் காணாமல்போயிருப்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது மட்டுமன்றி, ஆறுமுகசாமி ஆணையத்தை எதிர்த்தும் வழக்குபோட்டவர் இந்த வேதா. கட்சிக்கொடியை மார்ச் 2-ம் தேதி சென்னையில் வெளியிட்டார். பிரதமர் மோடியின் உருவத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது கொடி. “வரக்கூடிய தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்று, நாங்கள்தான் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம்(?)’’ என்று சிரிக்காமல் சொல்கிறார் வேதா!

அதிரிபுதிரி உதிரி!

அட்டாக் அர்ஜுனமூர்த்தி!

தமிழக பா.ஜ.க-வின் அறிவுசார் துறையின் தலைவராக இருந்தவரைக்கும் யாரென்றே தெரியாத நபராக இருந்த அர்ஜுனமூர்த்தி, ரஜினி அறிமுகப்படுத்தியதும்தான் வெளியில் தெரிந்தார். கட்சி தொடங்கும் விஷயத்தில் ரஜினி திடீரென்று பின்வாங்கியதால், `இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி’ என்ற பெயரில் புதுக்கட்சியைத் தொடங்கிய அர்ஜுனமூர்த்தி, ரஜினி மன்ற நிர்வாகிகள் பலரும் தன்னுடன் இணையவிருப்பதாகச் சொன்னார். ‘தலைவர் வந்தாலும் வராவிட்டாலும் உன்னுடன் வர மாட்டோம்’ - என்று சமூக வலைதளங்களில் அர்ஜுனமூர்த்தியைக் கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ‘மராட்டிய மாநில ரஜினி மக்கள் மன்ற’ தலைவரான ஆதிமூலம், “அர்ஜுனமூர்த்தி அல்ல... அந்த மும்மூர்த்திகளே வந்தாலும் சரி... தலைவர் ரஜினி நேரடியாக வாய் திறந்து சொல்லும்வரை யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டோம்” எனக் காட்டமாக அறிக்கைவிட்டிருக்கிறார்.

அதிரிபுதிரி உதிரி!

யாரும் கண்டுகொள்ளவில்லையே!

தமிழகத்தைப் பொறுத்தவரை, 13 சதவிகிதம் உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை இரண்டு திராவிடக் கட்சிகளும் முக்கியமானவையாகக் கருதுகின்றன. ‘‘சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் பா.ஜ.க அல்லாத கூட்டணிக்குத்தான் வாக்களிப்பது வாடிக்கை. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனித்துவிடப்பட்டதால், தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இஸ்லாமியர்களின் வாக்குகள் பிரிந்தன. இம்முறை அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால், முஸ்லிம்களின் ஆதரவு தி.மு.க கூட்டணியை நோக்கியே இருக்கும்’’ என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. அதற்கேற்ப, முஸ்லிம் கட்சிகளும் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஆர்வமாக இருக்கின்றன. ஆனால், தி.மு.க கூட்டணியிலிருக்கும் இரு முஸ்லிம் கட்சிகள் அதற்கு தடா போடுவதாகப் புலம்புகிறார்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியினர். இதனால், அ.தி.மு.க-வுடன் செல்லலாமா... 2019 எம்.பி தேர்தல்போல அ.ம.மு.க-வுடன் செல்லலாமா... அல்லது கமலுடன் செல்லலாமா?’ என்று தலையைப் பிய்த்துக்கொள்கிறார்களாம்.

அதிரிபுதிரி உதிரி!

இதேபோல், தி.மு.க-வுடன் கூட்டணியிலுள்ள மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து, தாங்கள்தான் உண்மையான ம.ம.க என்று தனி அணியாகச் செயல்பட்டுவரும் ஹைதர் அலி, உஸ்மான் உள்ளிட்டோர் தி.மு.க-வுடன் பேச முயன்றபோதும் அது நடக்கவில்லை. ம.ம.க உள்ளிருப்பதால் தி.மு.க இவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, அ.ம.மு.க அமைக்கும் கூட்டணியில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், மார்ச் 2-ம் தேதி சசிகலாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ஹைதர் அலி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism