Election bannerElection banner
Published:Updated:

ஊட்டி: வேட்பாளராக யாரை அறிவிப்பதென தெரியாமல் திணறும் பா.ஜ.க - கடுகடுக்கும் நிர்வாகிகள்

bjp
bjp

நீலகிரி மாவட்டம் ஊட்டி தொகுதியில் பா.ஜ‌.க போட்டியிடவுள்ள நிலையில், இது வரை வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 3 தொகுதிகளில் குன்னூர்,கூடலூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.கவும் ஊட்டி தொகுதியில் அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.கவும் களமிறங்கவுள்ளது. காங்கிரஸின் கோட்டையான ஊட்டி சட்டமன்றத் தொகுதியில், கூட்டணி மூலம் காங்கிரசுக்கு எதிராக முதல் முறையாக பா.ஜ.க களம் காணவுள்ளது.

bjp
bjp

கூட்டணி சார்பில் ஊட்டி தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக கணேஷ் வேட்பாளராக களமிறங்குகிறார். சிட்டிங் எம்.எல்.ஏவான கணேஷ் மீது ஊட்டி மக்களுக்கு அதிருப்தியிருந்தாலும் தொகுதியை தக்கவைக்க தி.மு.க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

ஆனால் எதிர் தரப்பான பா.ஜ.கவோ தற்போது வரை வேட்பாளரையே அறிவிக்க முடியாமல் திணறி வருகிறது.இது குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்ட பா.ஜ.க நிர்வாகி ஒருவர்," எங்க கட்சி சார்பா 10 பேர்தான் ஊட்டி தொகுதியில போட்டியிட விருப்பமனு கொடுத்துருக்கோம். ரெண்டு மூணு ஆலோசனைக் கூட்டம் நடந்தாச்சு ஒரு முடிவும் எட்டல. இடையில அ.தி.மு.கவுக்கு ஊட்டிய கொடுக்க பாத்தாங்க. கட்சியோட முக்கிய நிர்வாகி ஹெலிகாப்டர்ல வந்து பேச்சுவார்த்தை நடத்துனார். இன்னும் முடிவுக்கு வரல. தேர்தலுக்கு நாள் குறைவாதான் இருக்கு,சீக்கிரமா வேட்பாளரை அறிவிச்சாதான் உண்டு"என புலம்புகிறார்.

bjp
bjp

"கட்சியில போட்டியிட வெயிட்டான போட்டியாளர் யாரும் இல்லை என்பதால், அ.தி.மு.க-வில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதுவும் செட்டாகவில்லை என்றால் ஏற்கனவே தேர்வு செய்த வேட்பாளரையே அறிவிக்க உள்ளனர்" என அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் வியூகத்தை பகிர்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு