Election bannerElection banner
Published:Updated:

வாக்காளர்களுக்கு கூகுள் பே, பேடிஎம் மூலம் பணப்பட்டுவாடா... தேர்தல் ஆணையத்தால் கண்டுபிடிக்க முடியுமா?

கூகுள் பே
கூகுள் பே

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் டெக்னாலஜி முக்கியப் பங்காற்றுகிறது. வேட்பாளர்களுடனான நேர்காணல் தொடங்கி பிரசாரம் வரை எங்கும் டெக்னாலஜிதான். அதன் நீட்சியாக இப்போது இன்னொன்றும் நடந்திருப்பதாகக் குற்றாச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் டெக்னாலஜி முக்கியப் பங்காற்றுகிறது. வேட்பாளர்களுடனான நேர்காணல் தொடங்கி பிரசாரம் வரை எங்கும் டெக்னாலஜிதான். அதன் நீட்சியாக இப்போது இன்னொன்றும் நடந்திருப்பதாகக் குற்றாச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இந்தியத் தேர்தல்களில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும் சம்பிரதாயம் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தேர்தல் ஆணையம் எவ்வளவு முயன்றாலும் பணம் கொடுக்க புதுப்புது வழிகளைக் கட்சிகள் கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கின்றன. இந்த முறை, அவர்களுக்குக் கை கொடுத்திருப்பது டிஜிட்டல் வாலெட்கள்.

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

வாக்காளர்களின் மொபைல் எண் மட்டும் தெரிந்தால் போதும்; பணம் அனுப்பிவிடலாம். இந்த முறையில் பணம் தற்போது தரப்பட்டிருப்பதாகவும், அதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் தொகுதி உட்பட சில தொகுதிகளில் தேர்தலையே ரத்து செய்ய கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றன. இதில் உண்மையில் இப்படிப் பணம் அனுப்புவது சாத்தியமா? அதைத் தேர்தல் ஆணையம் கண்டறிய முடியுமா?

முதலில், டிஜிட்டல் வாலெட் மூலம் பணம் அனுப்ப இரண்டு முக்கிய வழிகள் இருக்கின்றன. வாலெட்டிருந்து வாலெட்டுக்கு அனுப்புவது ஒன்று; UPI மூலம் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்புவது இன்னொன்று. இரண்டாவதில், பேங்க் ஸ்டேட்மென்ட் மூலம் ஒருவர் இன்னொருவருக்கு பணம் அனுப்பியிருக்கிறார் என்பது தெரிய வரலாம். ஆனால், முதல் வழியில் அனுப்பியவரோ, வாங்கியவரோ அல்லது உதவி செய்த டிஜிட்டல் வாலெட் கம்பெனியோ சொல்லாமல் கண்டுபிடிக்கவே முடியாது.

Digital payment
Digital payment

இப்படியிருக்க, பணம் அனுப்பப்பட்டது என்பது நிரூபிப்பது சிரமம். அப்படியே இருந்தாலும், அது வாக்குக்காகத் தரப்பட்டது என்பதை நிரூபிப்பது கடலில் ஊசியைப் போட்டுவிட்டுக் கண்டுபிடிக்க முயல்வது போன்றதுதான்.

ஒரே மொபைல் எண்ணிலிருந்து நிறைய பேருக்கு பணம் அனுப்பபட்டது தெரிந்தால் அதன் மூலம் பணம் அனுப்பியவரை நெருங்கலாம். அதற்கு ஆர்.பி.ஐ-ன் உதவி கிடைத்தால் வேலையும் கொஞ்சம் எளிதாகும். ஆனால், தேர்தல் ஆணையம் இந்த அளவுக்குப் போகுமா என்பதுதான் இப்போதிருக்கும் கேள்வி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு