Published:Updated:

`வெற்றிபெற்றது தேவி மாங்குடியா.. பிரியதர்ஷினியா?' -சங்கராபுரத்தைச் சீண்டும் கோஷ்டிகள்

தேவி மாங்குடி போஸ்டர்
தேவி மாங்குடி போஸ்டர்

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் சூழலில், தேவி மாங்குடி தரப்பினர் தாங்கள்தான் வெற்றி பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.

சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தல் வெற்றி குறித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்காத சூழலில், தொண்டர்களின் தவறான தகவலால் மீண்டும் குழப்பம் நீடித்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் தேவி மாங்குடி மற்றும் பிரியதர்ஷினி அய்யப்பன் ஆகிய இருவரும் வெற்றிபெற்றதாக 2 வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனால் குழப்பம் ஏற்பட்டது. அதிகாரிகள் செய்த தவற்றால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிரியதர்ஷினி அய்யப்பன்
பிரியதர்ஷினி அய்யப்பன்

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பிரியதர்ஷினி அய்யப்பன் பதவி ஏற்பதைத் தடை செய்ய வேண்டும் என தேவி மாங்குடி மனு அளித்தார். இந்த மனு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் சூழலில், தேவி மாங்குடியின் ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் சிலர், தாங்கள்தான் வெற்றி பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.

madurai hc
madurai hc

இதுகுறித்து தேவியின் கணவர் மாங்குடியிடம் பேசினோம். `` நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது இவ்வாறு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம். யார் வெற்றி பெற்றது என தற்போது வரை நீதிமன்றம் அறிவிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.

`உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஓடந்துறை சண்முகம்!' 
- மக்கள் கொடுத்த உள்ளாட்சி அதிர்ச்சி

இதைக் கேட்காமல் சிலர் தவறாகப் பதிவு செய்துள்ளனர். முகநூலில் பரவிய தகவல் தவறானது. நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு எப்போதும் கட்டுப்படுவோம்"என்றார்.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பேசுகையில், ``சங்கராபுரம் தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ளது. நேற்றைய விசாரணையில் பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்கால தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் யார் வெற்றி பெற்றார் என்பது உறுதியாகவில்லை. தவறான தகவலை யாரும் பரபரப்ப வேண்டாம்” என்கின்றனர்.

பின் செல்ல