Published:Updated:

நீலகிரி: சொந்த ஊர் மக்களின் வாக்குகளைப் பெறாத ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சராகிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராமச்சந்திரன் மற்றும்  எம்.பி ஆ.ராசா
ராமச்சந்திரன் மற்றும் எம்.பி ஆ.ராசா

குன்னூர் எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு முன்ன இருந்த கதர் வாரியம் அப்படி இல்லன்னா சுற்றுலாத்துறை கிடைக்கும்னு எதிர் பார்த்தோம். இப்போ வனத்துறைய ஒதுக்கி அறிவிப்பு வந்துருக்கு. தொண்டர்கள் எல்லாருமே உற்சாகத்துல இருக்காங்க - என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள் .

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குன்னூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 91 ஆயிரத்து 913 வாக்காளர்களில், 1 லட்சத்து 34 ஆயிரத்து 720 பேர் வாக்களித்திருந்தனர். தி.மு.க வேட்பாளர் ராமசந்திரன் 61,820 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க வேட்பாளர் வினோத் 57,715 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லாவண்யா 7,252 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்தார்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

தி.மு.க-வின் கோட்டையான குன்னூர் தொகுதியைக் கடந்த தேர்தலில் அ.தி.மு.க-விடம் பறிகொடுத்தார் மாவட்டச் செயலாளர் முபாரக். இந்த முறை எப்படியாவது கோட்டையைக் கைப்பற்றியாக வேண்டுமென, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சிட் கொடுக்கபட்டது. அவரது சமூகத்தாரின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே சீட் வழங்க தலைமை முடிவு செய்ததாக கூறப்பட்டது. அ.தி.மு.க சார்பிலும் ராமச்சந்திரனின் சமூகத்தைச் சேர்ந்த வினோத்துக்கு சீட் கொடுக்கப்பட்டது.

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் குன்னூர் தொகுதியில் நேரடியாக களம் கண்டன. 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராமச்சந்திரன் வெற்றி பெறுவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், பல சுற்றுகளில் பின்னடைவிலேயே இருந்து வந்தார். கடைசி நேரத்தில் முன்னேறி 4,115 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர் பெரிதும் நம்பிய இவரது சமூக ஓட்டுகளே இவருக்கு எதிராக திரும்பியது தான். சொந்த ஊரிலேயே இவருக்கு ஓட்டு விழவில்லை என கட்சியினர் புலம்புகின்றனர்.

இளித்துரையில் பதிவான வாக்குகள்
இளித்துரையில் பதிவான வாக்குகள்

இவரது வெற்றி குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க குன்னூர் நிர்வாகி ஒருவர்,``20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில ஜெயிப்போம்னு சொன்னது உண்மைதான். நாங்களும் அப்படித்தான் நெனச்சோம். போன டைம் கொரோனா சமயத்துல ராமச்சந்திரன் தரப்பு மக்களுக்கு எதுவுனே செய்யல. அ.தி.மு.க கட்சிக்காரங்க, வீடு வீடா காய்கறி மளிகைனு ஏகப்பட்ட உதவிய செஞ்சாங்க. நம்ம ஆளுங்க வெளிய தலையக் கூட காட்டல. இவரோட சமுதாய ஓட்டப்பூரா எதிர்கட்சில காச கொடுத்து கவர் பண்ணிட்டாங்க. இவரோட சொந்த ஊரான இளித்துரை கிராமத்துல இவருக்கு பாதி ஓட்டுக்கூட விழுகல. எல்லோரும் ரெட்டலைக்கு போட்ருக்காங்க.தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இதர மக்களே கை கொடுக்கவே ஜெயிச்சிட்டாரு. எப்படியோ ஜெயிச்சதே பெரிய புண்ணியம்.

முன்ன இருந்த கதர் வாரியம் அப்படி இல்லைன்னா சுற்றுலாத்துறை கிடைக்கும்னு எதிர் பார்த்தோம். இப்போ வனத்துறைய ஒதுக்கி அறிவிப்பு வந்துருக்கு. தொண்டர்கள் எல்லாருமே உற்சாகத்துல இருக்காங்க. சொந்த சமூகத்து மேல, ராமச்சந்திரன் செம்ம கடுப்புல இருக்காரு" என்றார்.

காடும் காட்டுயிர்களும் நிறைந்துள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வுக்கு வனத்துறையை ஒதுக்கியது வன உயிர் ஆர்வலர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு