Election bannerElection banner
Published:Updated:

மதுரை : பிரமாண்ட காஸ் சிலிண்டர் வைத்து தேர்தல் பரப்புரை - கவனத்தை ஈர்க்கும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்

பிரமாண்ட சிலிண்டருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள்
பிரமாண்ட சிலிண்டருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள்

திருப்பரங்குன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய்க்கு வாக்குச் சேகரிக்க, கட்சியினர் வித்தியாசமான யுக்திகளைக் கையில் எடுத்துள்ளனர்.

மதுரை, திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை எதிர்த்துப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாய்க்காக வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்துவருகிறார்கள் கட்சியினர்.

சி.பி.எம் வேட்பாளர் பொன்னுத்தாய்
சி.பி.எம் வேட்பாளர் பொன்னுத்தாய்

வேட்பாளர் அறிமுக நாளில் எளிமையானவர் என்பதை வெளிப்படுத்த ஆட்டோ டிரைவரான தன் கணவர் கருணாநிதியின் ஆட்டோவில் வாக்கு கேட்டு வலம்வந்தார்.

கணவரின் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிப்பு - எளிமையால் ஈர்க்கும் திருப்பரங்குன்றம் சிபிஎம் வேட்பாளர்

இந்தநிலையில் மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் என சி.பி.எம்-ன் பல்வேறு சார்பு அணியினர் சமூகப் பிரச்னைகளை எடுத்துச் சொல்லி பொன்னுத்தாய்க்கு வாக்கு கேட்டுவருகின்றனர்.

பிரமாண்ட கேஸ் சிலிண்டர்
பிரமாண்ட கேஸ் சிலிண்டர்

பகத் சிங் நினைவு தினமான இன்று சமையல் எரிவாயு விலை உயர்வைச் சுட்டிக்காட்ட, 12 அடி உயர சிலிண்டருடன் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டார்.

அது மட்டுமல்லாமல் தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னைகள், அவற்றைத் தீர்த்துவைக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ன செய்ய வேண்டும் என்பதை வேட்பாளரிடம் மக்கள் நேரடியாகத் தெரிவிக்கவும், வேறு குறைகளை இருந்தால் அதை வேட்பாளர் பொன்னுத்தாயிடம் தெரிவிக்கவும் அலைபேசி செயலி ஒன்றை இன்று அறிமுகப்படுத்தினர்.

செயலி அறிமுகம்
செயலி அறிமுகம்

பலம் பொருந்திய அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து வித்தியாசமான முறையில் சி.பி.எம் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருவது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு