Published:Updated:

மிரட்டல்... கண்ணீர்... சாபம்... பீதியூட்டும் பிரசாரங்கள்!

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

‘‘இரட்டை இலைக்கு ஓட்டுப் போடலைன்னா நல்ல சாவே சாவ மாட்டீங்க...’’

இந்தத் தேர்தல் களம் பல விசித்திரமான சம்பவங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமார், குழாயடியில் தண்ணீர் அடித்துக் கொடுக்கிறார். குஷ்பு, தோசை ஊற்றிக் கொடுக்கிறார். அ.தி.மு.க வேட்பாளர் தங்க.கதிரவன் துவைத்துக் காய்ந்துகொண்டிருந்த துணியை எடுத்து மீண்டும் துவைத்து வாக்குச் சேகரிக்கிறார். மன்சூர் அலிகான் செய்வதெல்லாமே வேற லெவல் அட்ராசிட்டிகள். டீ போடுவது, துணியை அயர்ன் செய்வது, பாட்டுப் பாடுவது, கம்பு சுற்றுவது என்ற வழக்கமான முறைகளைத் தாண்டி இம்முறை, மிரட்டல் பிரசாரத்தையும் கையிலெடுத்திருக்கிறார்கள் சில வேட்பாளர்கள். அவற்றில் சில...

மிரட்டல்... கண்ணீர்... சாபம்... பீதியூட்டும் பிரசாரங்கள்!

நாமக்கல் அ.தி.மு.க வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, ‘‘இரட்டை இலைக்கு ஓட்டுப் போடலைன்னா நல்ல சாவே சாவ மாட்டீங்க...’’ என்று நேரடி சாபம்விட்டார்.

மிரட்டல்... கண்ணீர்... சாபம்... பீதியூட்டும் பிரசாரங்கள்!

தி.மு.க சார்பாக வாக்குச் சேகரிக்கும் நாஞ்சில் சம்பத், ‘‘நான் எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் ஒன்று சொல்லுவேன். எந்தக் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டாலும் உங்களுக்கு கதி மோட்சம் கிடைக்காது. நீங்கள் செய்த அநியாயங்களுக்காக அழுகிச் சாவீர்கள்...’’ என்று சாபம் விட்டிருக்கிறார்.

மிரட்டல்... கண்ணீர்... சாபம்... பீதியூட்டும் பிரசாரங்கள்!

கடலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஐயப்பன், ‘‘யாரு காசு கொடுத்தாலும் வாங்கிக்கோங்க. ஆனா, உதயசூரியனுக்கு வாக்களிங்க. கேரளாவிலிருந்து மந்திரவாதியைக் கூட்டிட்டு வந்து உங்களுக்கெல்லாம் சூனியம் வெச்சுருக்கேன். மாத்தி ஓட்டு போட்டீங்கன்னா... வாந்தி வரும், ஜுரம் வரும், உடம்பு சரியில்லாமப் போகும். அதைவெச்சு யார் எங்களுக்கு ஓட்டுப் போடலைனு கண்டுபிடிச்சுருவோம்’’ என்று பீதியை டபுள் ஸ்ட்ராங்காக ஏற்றுகிறார்.

மிரட்டல்... கண்ணீர்... சாபம்... பீதியூட்டும் பிரசாரங்கள்!

சாத்தூர் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் ராஜவர்மன், போகுமிடங்களிலெல்லாம் ‘‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ராஜேந்திர பாலாஜியால் வெற்றிபெறவே முடியாது’’ என்று தொடர்ந்து ‘வாக்கு சொல்லி’ வருகிறார்.

மிரட்டல்... கண்ணீர்... சாபம்... பீதியூட்டும் பிரசாரங்கள்!

விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், ‘‘மக்களுக்காக உழைக்கிறேன் என்று கூறும் விஜயபாஸ்கர், தனக்காக உழைத்து தமிழகத்தின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். ஆனால், நான் உங்களுக்காக உழைப்பேன். என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. உயிர் மட்டுமே இருக்கிறது. நீங்கள் கைவிட்டால் அதையும் விட்டுவிடுவேன்’’ என பிளாக்மெயில் அஸ்திரத்தைக் கையிலெடுத்துள்ளார். பதிலுக்கு விஜயபாஸ்கரும், ‘‘எனக்கு சுகர் இருக்கிறது, ரத்தக் கொதிப்பு இருக்கிறது. கொரோனா காலத்தில் கடுமையாக உழைத்ததால் 7.5 கிலோ எடை குறைந்துவிட்டேன்’’ என்று சென்டிமென்ட்டாகப் பேசி விம்முகிறார்.

மிரட்டல்... கண்ணீர்... சாபம்... பீதியூட்டும் பிரசாரங்கள்!

சென்டிமென்ட், அழுகை, கண்ணீர், மிரட்டல், சாபம் என அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கும் அத்தனை அட்ராசிட்டிகளுக்குமான விடை, மே 2-ம் தேதி தெரிந்துவிடும்!

அடுத்த கட்டுரைக்கு