Published:Updated:

‘துரைமுருகன் 60 இடங்களில் பணம் பதுக்கியிருக்கிறார்!’ -ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

‘‘துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், ஓட்டுக்காக 60 இடங்களில் பணத்தைப் பதுக்கிவைத்திருக்கிறார். ஓர் இடத்தில் மட்டும் 27 லட்சம் ரூபாய் சிக்கியிருப்பதாக’’ அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். வாக்கு சேகரிப்பின்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி.சண்முகம், ‘‘கடந்த முறை தி.மு.க வேட்பாளர் கோடி கோடியாய் பணத்தைப் பதுக்கி வைத்திருந்தார். 

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்

11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது. 50, 60 கோடி ரூபாயைப் பின்புறமாக எடுத்துச்சென்றுவிட்டனர். மீண்டும் அதே தவற்றை தி.மு.க-வினர் செய்கிறார்கள். இப்போது, 60 இடங்களில் பணத்தைப் பதுக்கிவைத்திருக்கிறார்கள். ஓர் இடத்தில் மட்டும் 27 லட்சம் ரூபாய் சிக்கியிருக்கிறது.

வேலூருக்கான தேர்தல் பிரதமரைத் தேர்ந்தெடுக்க இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தி.மு.க-வினர் எதிர்பார்த்தார்கள். மத்தியில் மோடி தலைமையில் வலுவான ஆட்சி அமைந்திருக்கிறது. தி.மு.க-வினர் நினைத்தது நிறைவேறவில்லை. 

‘‘கதிர் ஆனந்த், ஓட்டுக்காக 60 இடங்களில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார். ஓர் இடத்தில் மட்டும் 27 லட்சம் ரூபாய் சிக்கியிருக்கிறது.’’
ஏ.சி.சண்முகம்

''வேலூர் தேர்தலில், 'வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளைக் கேளுங்கள். மீண்டும் பணத்தைக் கொண்டுவந்து தேர்தலை நிறுத்த முயற்சிக்க வேண்டாம்' என்று தி.மு.க-வை கேட்டுக்கொள்கிறேன்.''

இந்த சண்முகம் நாடாளுமன்றம் சென்றால்தான், மத்திய அரசின் திட்டங்களை வேலூர் தொகுதிக்குக் கொண்டுவர முடியும். பல நன்மைகளைச் செய்வேன். நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவேன்.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

துரைமுருகன் பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், பாலாற்றில் ஒரு தடுப்பணையைக்கூட அவர் கட்டவில்லை. அவர்களுக்கு வாக்களித்தால் பிரயோஜனமில்லை’’ என்றார்.