மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் வார்டு உறுப்பினருக்கான பதவிக்கு போட்டியிட 150 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அவற்றில் 17, 21, 22 ஆகிய மூன்று வார்டுகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த இரண்டு பேர், த.மு.மு.க 1, நாம் தமிழர் 1, சுயேச்சை 1 என 5 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் ஆத்திரமடைந்தவர்கள், தங்கள் கட்சியியைச் சேர்ந்த ஆதரவாளர்களுடன் சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், மனுவைப் பொய் காரணம் கூறி நிராகரித்ததாக சீர்காழி நகராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் நாகராஜனைப் பணி நீக்கம் செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் தகவலறிந்து வந்த மயிலாடுதுறை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜேந்திர பாண்டி வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட ஐந்து பேரின் மனுக்களை ஆய்வு செய்தார். அவற்றில் மூன்று பேரின் மனுக்கள் சரியாக இருந்ததால், அவற்றை ஏற்றுகொண்டு மீதமுள்ள இரண்டு பேரின் மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார். அதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.