Published:Updated:

கோவா குடும்ப அரசியல்: 35 சதவிகிதத் தொகுதிகளில் 7 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போட்டி!

தேர்தல்

கோவாவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 35 சதவிகிதத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

கோவா குடும்ப அரசியல்: 35 சதவிகிதத் தொகுதிகளில் 7 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போட்டி!

கோவாவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 35 சதவிகிதத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

Published:Updated:
தேர்தல்

கோவா சட்டமன்றத்துக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலையிலேயே முதல்வர் பிரமோத் சாவந்த் வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ``கோவாவில் பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப அரசியல் செய்வதாக ஒன்றை ஒன்று பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கோவாவில் பெரும்பாலான கட்சிகள் ஒரே குடும்பத்தில் பலருக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கின்றன. கோவாவில் உள்ள மொத்தத் தொகுதிகளில் 35 சதவிகிதத் தொகுதிகளில், கோவாவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க அமைச்சர் விஷ்வஜித் ராணேவுக்கும், அவர் மனைவிக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கோவா
கோவா

அதோடு அதனாசியோ மான்செராட்டேவுக்கும், அவர் மனைவிக்கும் பா.ஜ.க வாய்ப்பு கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க-விலிருந்து சீட் கிடைக்காமல் வந்த மிக்கேல் லோபோவுக்கும், அவர் மனைவிக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இது குறித்து மிக்கேல் லோபோவிடம் கேட்டதற்கு, ``என் மனைவி 10 ஆண்டுகளாக பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிறார். அதோடு அவர் அரசியலிலும் தீவிரமாக இருக்கிறார். எனவேதான் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

மகாராஷ்டிரவாடி கோமந்த கட்சி, ராமகிருஷ்ணா, பாண்டுரங் சகோதரர்களை தேர்தலில் நிறுத்தியிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கிரண் என்பவருக்கும், அவர் மனைவி கவிதாவுக்கும் தேர்தலில் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இது தவிர சர்ச்சில் என்பவருக்கும், அவர் மகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இது குறித்து சர்ச்சிலிடம் கேட்டதற்கு, ``ஒவ்வொருவரும் ஏன் இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு டாக்டர் தன் மகளையோ, மகனையோ டாக்டராக்க முயலும்போது அதை யாரும் கேட்பதில்லை. என் மகள் அவளாகத்தான் அரசியலுக்கு வந்தார்" என்று தெரிவித்தார்.

கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 35 சதவிகிதம் வேட்பாளர்கள் ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism