Election bannerElection banner
Published:Updated:

பட்டப்பகலில் வாண வேடிக்கை; புகை சூழ்ந்த நகரம்! - அபராதத்தில் முடிந்த அதிமுக வேட்புமனுத் தாக்கல்

அதிமுக
அதிமுக

வேட்புமனுத் தாக்கலின்போது கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதாக அதிமுக மீது ரூ.5,000 ஆயிரம் அபராதம் விதித்து, கையோடு அபராத தொகையை வசூலித்தனர்.

அதிமுக., பாஜக கூட்டணியில் குன்னூர், கூடலூர் தொகுதியில் அ.தி.மு.க-வும், ஊட்டி தொகுதியில் பாஜக-வும் களம்காண்கின்றன. கூடலூர் தொகுதியில் பொன்.ஜெயசீலனும், குன்னூர் தொகுதியில் மாவட்டச் செயலாளர் வினோத்தும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக
அதிமுக

சிட்டிங் எம்.எல்‌.ஏ-வுக்கு கல்தா கொடுத்தும், மூத்த நிர்வாகிகளை எதிர்த்தும், மாவட்டச் செயலாளர் வினோத் வேட்பாளரானார். கோஷ்டிப்பூசல் காரணமாக அறிமுக கூட்டமே கைகலப்பில் முடிந்தது. ஒருவழியாக சில நிர்வாகிகளைச் சமாதானம் செய்த வினோத், தொண்டர்கள் புடைசூழ குன்னூரில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

குன்னூர் பெட்ஃபோர்ட் பகுதியில் தொடங்கி,பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர். ஒரு வண்டி முழுக்கப் பட்டாசுகளை ஏற்றிவந்து வழிநெடுகிலும் வெடித்தனர். மேலும் பட்டப்பகலிலேயே இடைவிடாது வாண வேடிக்கைகளையும் வெடித்தனர். இதனால் நகர் முழுவதும் புகை சூழ்ந்து தொண்டர்கள் முதல் பாதுகாப்பிலிருந்த போலீஸார் வரை திணறினர்.

அதிமுக
அதிமுக

வேட்புமனுத் தாக்கல் செய்ய சார் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நிர்வாகிகள் வந்ததால், அவர்களைத் திருப்பி அனுப்பினர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை என அதிகாரிகள் அதிமுக மீது அபராதம் விதித்தனர்.

அமைச்சர்களின் ஆதிக்கம்... வேட்பாளர் பட்டியல் குளறுபடி... கொங்கு மண்டலத்தில் சரியும் அதிமுக?

இது குறித்துப் பேசிய பெண் அதிகாரி ஒருவர், ``கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்திருக்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளைக் கடுமையாகப் பின்பற்ற அரசு உத்தரவிட்டிருக்கிறது.

வாண வேடிக்கை
வாண வேடிக்கை

வேட்புமனுத் தாக்கலின்போது அ.தி.மு.க வேட்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத காரணத்தால் ரூ.5,000 அபராதம் விதித்து வசூலித்தோம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு