Published:Updated:

`துரோகம் செய்துவிடாதீர்கள்!' - வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உருகிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

`உள்ளாட்சித் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு எந்தவித துரோகமும் செய்யாமல் உழைக்க வேண்டும்' என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொண்டர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பணப்பட்டுவாடா, மதுபாட்டில் விநியோகம் என அள்ளித் தெளித்து வாக்காளர்களை வளைத்துக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

கடலூர் மாவட்டத்திலும் தேர்தல் திருவிழா களைகட்டியிருக்கிறது. விருத்தாசலம் பகுதியில் கம்மாபுரம் ஒன்றிய தி.மு.க வேட்பாளர்கள் சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

`ஸ்டாலின் காரை மறித்த பா.ஜ.க -வினர்; கொந்தளித்த தி.மு.க!’ - மதுரையில் என்ன நடந்தது?

அதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ``தமிழகத்தில் உணர்வுகளை மதிக்கக்கூடிய, கூட்டணிக்காக உழைக்கக் கூடிய ஒரு இயக்கம் என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான். தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித துரோகமும் செய்யாமல் உழைக்க வேண்டும். நம் கூட்டணி காட்சிக்காரர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். மக்களுடைய பிரச்னைகளைச் சரி செய்யக்கூடியது ஊராட்சி ஒன்றியங்கள்தான்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

அதனால் ஊராட்சி ஒன்றியங்களில் நாம் அதிகமான இடங்களைப் பிடிக்க வேண்டும். இந்தத் தேர்தலை ஆளுங்கட்சி பணபலத்தோடு எதிர்கொள்கிறது. ஆனால், நாம் கொள்கை பலத்தோடு எதிர்கொள்ள இருக்கிறோம். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல். நமது கட்சிக்குக் கூட்டணி கட்சியினரும், கூட்டணிக் கட்சியினருக்கு நாமும் எந்தவித துரோகமும் செய்யாமல் உழைத்திட வேண்டும். நமது கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி ஒரே முனைப்புடனும் கட்டுக்கோப்புடனும் துரோகம் எதையும் விளைவிக்காமல் வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும்” என்றார்.