Election bannerElection banner
Published:Updated:

வாக்களிக்க உங்கள் நிறுவனம் சம்பள விடுப்பு அளிக்க வில்லையா... நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

Election
Election ( AP Photo: Anupam Nath )

தேர்தல் ஜனநாயகத்தில் அனைத்து மக்களின் குரலும் முக்கியம் என்பதால்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன்கீழ் தேர்தல் அன்று அனைவருக்கும் சம்பளத்துடன்கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது.

ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நடக்கவிருக்கிறது. வார இறுதி வந்துவிட்ட நிலையில், இப்போதே பலரும் வாக்களிக்க தங்கள் ஊர்களுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர். இதற்காக அரசு சிறப்புப் பேருந்துகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது.

ஆனால், இந்த வாய்ப்பும் வசதியும் அனைவருக்கும் இருப்பதில்லை. சில நிறுவனங்களில் தேர்தல் அன்று விடுமுறை இல்லாத நிலையே இன்னும் தொடர்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள், அன்றாடப் பணியாளர்களின் நிலையும் இதேதான். வெளியூரில் வாக்கு இருந்தாலோ, உள்ளூரிலேயே வாக்கு இருந்தும்கூட தேர்தல் அன்று பணி நாளாக இருந்தாலோ இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாது.

Elections
Elections
AP Photo / Anupam Nath

தேர்தல் ஜனநாயகத்தில் அனைத்து மக்களின் குரலும் முக்கியம் என்பதால்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் கீழ் தேர்தல் அன்று அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால், இது பல இடங்களில் பின்பற்றப் படுவதில்லை. இந்தப் பிரச்னை குறித்து நேற்று விகடன் இணையதளத்தில், `நாங்கெல்லாம் எப்படி சார் ஓட்டு போடுறது?' - தவிக்கும் ஊழியர்கள்... ஆக்‌ஷனில் இறங்குமா ஆணையம்?' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத வணிக நிறுவனங்கள் மீது எப்படி புகார் செய்யலாம் என்பது குறித்தும் பேசியிருந்தோம்.

இந்த நிலையில், நேற்று முதல் பல மாவட்ட தொழிலாளர் துறை ஆணையர்களும் இதுதொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்கான எண்களை வெளியிட்டு வருகின்றனர்.

உதாரணமாக சென்னை, தொழிலாளர் உதவி ஆணையர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தேர்தல் வாக்குப்பதிவு நாளான வருகிற 6-ம் தேதி மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின்படி, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனத் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்துத் தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக சென்னையில், அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இதர வகை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், அனைத்துத் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வருகிற 6-ம் தேதி ஒருநாள் சம்பளத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

Election
Election

இதுதொடர்பான புகார்களைப் பெற ஏதுவாக சென்னையில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்த புகார்களை,

தொழிலாளர் உதவி ஆணையர் எஸ்.ரேவதி - 9840249504,

தொழிலாளர் உதவி ஆணையர் ஜி.கே.தாசரதி - 9841208118

மற்றும் 7904893374, 7708487415 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல பிற மாவட்டத்திலும் அந்தந்த மாநிலத் தொழிலாளர் நலத்துறையைத் தொடர்புகொண்டு இது தொடர்பான புகார்களைப் பதிவு செய்யலாம். இல்லையெனில், 1950 என்ற இலவச தேர்தல் உதவி எண்ணுக்கு அழைத்தும் புகாரளிக்கலாம்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு