Published:Updated:

நாம் தமிழர் வேட்பாளருக்கு விழுந்த வாக்குகளால் கூடலூர் கோட்டையை இழந்த திமுக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தோல்வியைத் தழுவிய காசிலிங்கம் [திமுக]
தோல்வியைத் தழுவிய காசிலிங்கம் [திமுக]

மா‌‌.செ மீதான அதிருப்தி, வேட்பாளர் தேர்வில் சொதப்பல், நாம் தமிழர் கட்சிக்குப் பதிவான திமுக வாக்குகள் போன்ற பல காரணங்களால் கூடலூரில் திமுக-வின் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 1,89,221 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 1,37,240 வாக்குகள் பதிவாகியிருந்தன. தி.மு.க-அ.தி.மு.க நேரடிக் களம் கண்ட இந்தத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் பொன்.ஜெயசீலன் 64,496 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தி.மு.க வேட்பாளர் காசிலிங்கம் 62,551 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கேத்தீஷ்வரன் 7,317 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.தே.மு.தி.க வேட்பாளர் யோகேஷ்வரன் 1,173 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் பாபு 960 வாக்குகளும் பெற்றனர். தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி வேட்பாளர் ஜெயபிரகாஷ் 322 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் சரவணன் 421 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 1,017 வாக்குகள் பதிவாகியிருந்தன. 498 செல்லாத வாக்குகள் பதிவாகியிருந்தன.

வெற்றிபெற்ற வேட்பாளர் ஜெயசீலன் [அதிமுக]
வெற்றிபெற்ற வேட்பாளர் ஜெயசீலன் [அதிமுக]

தாயகம் திரும்பிய தமிழர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களை அதிகம்கொண்டுள்ள இந்தத் தொகுதி, தி.மு.க-வின் கோட்டையாகவே இருந்துவந்தது. கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து தி.மு.க-வே இங்கு கொடியை நாட்டியது. தோட்டத் தொழிலாளர் வம்சாவளியைச் சேர்ந்த தாயகம் திரும்பிய தமிழர்களை முதன்முறையாக தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களின் வேட்பாளர்களாக அறிவித்து வாய்ப்பளித்தன.

கூடலூரில் தி.மு.க சார்பில் யாரை நிறுத்தினாலும் வெற்றி உறுதி என்ற நம்பிக்கை இருப்பதால், தொடர்ந்து 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ-வாக இருந்த திராவிட மணிக்கு கல்தா கொடுத்து நெல்லியாளம் தி.மு.க நகரச் செயலாளர் காசிலிங்கத்துக்கு சீட் கொடுக்கப்பட்டது. வேட்பாளர்‌ தேர்வில் சொதப்பியதாக உடன்பிறப்புகள் அப்போதே போர்க்கொடியை உயர்த்தினாலும், ஐ-பேக்குக்கு பயந்து அமைதி காத்தனர்.

தோல்வியைத் தழுவிய காசிலிங்கம் [திமுக]
தோல்வியைத் தழுவிய காசிலிங்கம் [திமுக]

அ.தி.மு.க சார்பில் பொன்.ஜெயசீலனை வேட்பாளராக அறிவித்து களமிறக்கினர். இருவருமே தாயகம் திரும்பிய தமிழர்கள் என்பதால் கடுமையான போட்டி நிலவியது. களத்தைத் தனக்குச் சாதகமாக்கி தி.மு.க கோட்டையில் 15 ஆண்டுகளுக்குப் பின் அ.தி.மு.க கொடியை நாட்டியிருக்கிறார் ஜெயசீலன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மா‌‌.செ.முபாரக் மீதான அதிருப்தி, வேட்பாளர் தேர்வில் சொதப்பல், நாம் தமிழர் கட்சிக்குப் பதிவான தி.மு.க வாக்குகள் போன்ற பல காரணங்களால் கூடலூரில் தி.மு.க கோட்டை தகர்க்கப்பட்டிருப்பதாகப் புலம்பிய கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்,``போன தேர்தலில் குன்னூரை கோட்டைவிட்ட மாவட்டச் செயலாளர் முபாரக்குக்கு இந்த முறை சீட் இல்லன்னு சொல்லிட்டாங்க. சீட்டுக்காக அறிவாலயத்துல கெஞ்சியும் மெரட்டியும் பார்த்தார் ஆனா எதுவுமே நடக்கலை.எனக்கு சீட் கொடுக்காட்டி பரவாயில்லை, என்னோட ஆதரவாளரான காசிலிங்கத்துக்கு கூடலூரில் சீட் கொடுத்தே ஆகணும்னு ஒத்தக்கால்ல நின்னு சீட் வாங்குனார்.

வெற்றி பெற்ற வேட்பாளர் ஜெயசீலன் [அதிமுக]
வெற்றி பெற்ற வேட்பாளர் ஜெயசீலன் [அதிமுக]

காசிலிங்கம் மேல கட்சிகாரங்களுக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை. இதோட நாம் தமிழர் 7,000 ஓட்டு வாங்கியிருக்கு. இதுல 5,000 ஓட்டுகளுக்கு மேல தி.மு.க ஓட்டுதான். சிட்டிங் எம்.எல்.ஏ திராவிட மணி, மாங்கோடு ராஜா இவுங்கள்ள யாருக்கு கொடுத்திருந்தாலும் ஈஸியா ஜெயிச்சிருக்கலாம்.1,945 ஓட்டு வித்தியாசத்துல தோக்க வேண்டியதா போச்சு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு