Published:Updated:

‘சில்லி விமர்சனம்; ஏ.சி.எஸ்ஸுக்கு பதில் சொல்ல மாட்டேன்!’- துரைமுருகன் காட்டம்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

‘‘அ.தி.மு.க-வினரின் சில்லித்தனமான விமர்சனத்துக்கெல்லாம் பதில் சொல்லிப் பழகியவன் நான் இல்லை’’ என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

துரைமுருகன்
துரைமுருகன்

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை எதிர்கொள்வது குறித்து கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.

துரைமுருகன் - கதிர் ஆனந்த்
துரைமுருகன் - கதிர் ஆனந்த்

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘‘தி.மு.க பொய் பிரசாரம் செய்வதாகக் கூறும் அ.தி.மு.க-வினரின் சில்லித்தனமான விமர்சனத்துக்கெல்லாம் பதிலளித்துப் பழகியவன் நான் இல்லை. யார் பொய் சொல்கிறார்கள், யார் மெய் பேசுகிறார்கள் என்று மக்களுக்குத் தெரியும். வருமானவரித் துறையினர் அவர்களின் பணியைச் செய்கிறார்கள். தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்படுவதுகுறித்து கூட்டணிக் கட்சியினருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். தேர்தலை நிறுத்த தி.மு.க முயற்சி செய்வதாக புதிய நீதிக்கட்சி தலைவரும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் கூறியதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

மேலும், பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரம் பேர் தற்காலிகப் பணியாளர்களாக வேலைசெய்து வருகிறார்கள். அவர்களைப் பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டும். ஆனால், ஒருவரைக்கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. இதுதான் இந்த அரசின் சாதனை’’ என்றார்.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

இந்தக் கூட்டத்தில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைசாமி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், காந்தி, கார்த்திகேயன் உட்பட, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.