Published:Updated:

தஞ்சாவூர் மாநகராட்சி: அதிமுக வேட்பாளரிடம் விலை போனாரா திமுக வேட்பாளர்?! - பரபரப்பை கிளப்பிய வீடியோ

தஞ்சாவூர் மாநகராட்சி

``நாங்க பாரம்பர்யமான திமுக குடும்பம்.கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால் தலைமை எனக்கு போட்டியிட சீட் வழங்கியிருக்கிறது. சிலர் சுய ஆதாயத்திற்காக நான் விலை போய் விட்டதாக பேசி வருவதாக” தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கூறுகிறார்.

தஞ்சாவூர் மாநகராட்சி: அதிமுக வேட்பாளரிடம் விலை போனாரா திமுக வேட்பாளர்?! - பரபரப்பை கிளப்பிய வீடியோ

``நாங்க பாரம்பர்யமான திமுக குடும்பம்.கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால் தலைமை எனக்கு போட்டியிட சீட் வழங்கியிருக்கிறது. சிலர் சுய ஆதாயத்திற்காக நான் விலை போய் விட்டதாக பேசி வருவதாக” தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கூறுகிறார்.

Published:Updated:
தஞ்சாவூர் மாநகராட்சி

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 23-வது வார்டில் தி.மு.க சார்பில் ராமச்சந்திரன் என்பவர் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் முன்னாள் மேயரான சாவித்திரியின் கணவர் கோபால் போட்டியிடுகிறார். இருதரப்பினரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று மாவட்ட அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக வேட்பாளர் ராமச்சந்திரன்
திமுக வேட்பாளர் ராமச்சந்திரன்

அந்த வீடியோவில், சாவித்திரி, அவர் கணவர் கோபால் இருவரும், காரில் வருகின்றனர். ராமச்சந்திரனைப் பார்த்து கார் நிற்க, கதவை திறந்து கோபாலிடம் வணக்கம் வைக்கிறார் ராமச்சந்திரன். சில நிமிடங்கள் அந்த சந்திப்பு நடக்கிறது. இதனை தொடர்ந்து சுப்ணி என்பவர் காரில் ஏறுகிறார். அவரும் சில நிமிடங்கள் பேசி விட்டு இறங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. சுப்ணி காரில் இருந்து இறங்கும் போது கையில் பை ஒன்று வைத்திருந்தார். இந்த நிலையில் தான் அதில் பணம் இருந்தது என்றும் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக ராமச்சந்திரன் பணம் வாங்கி விட்டார் என்றும் கட்சி தலைமை அவர் மீது நம்பிக்கை வைத்து சீட் கொடுத்தது ஆனால் அவர் விலை போய் விட்டார் எனவும் பரவலாக பேச்சுக்கள் கிளம்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் ராமச்சந்திரன் இதனை மறுத்திருப்பதுடன், ``குடும்ப நண்பர் என்கிற முறையில் கோபாலை சந்தித்தேன். எனக்கு வேண்டாத சிலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நான் விலை போய் விட்டதாக பரபரப்பி வருவதாக” தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். இதனால் இரண்டு கட்சிகள் மத்தியிலும் பரபரப்பு நிலவி வருகிறது.

முன்னாள் மேயரான மனைவி சாவித்திரியுடன் கோபால்
முன்னாள் மேயரான மனைவி சாவித்திரியுடன் கோபால்

இது குறித்து ராமச்சந்திரனிடம் பேசினோம், ``நாங்க ஒரே பகுதியில் வசிப்பதால் சின்ன வயசிலே இருந்து நண்பர்கள். இரண்டு பேரின் குடும்பமும் நல்ல நட்புடன் பல காலமாக இருந்து வருகிறோம். 1985-ல் கோபால் கல்லூரியில் படிக்கும் போது மாணவர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவரின் வெற்றிக்காக நான் வேலை செய்தவன். மாவட்டம் என்று தான் கோபாலை அழைப்பேன். இப்போது அவரை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன். நண்பர் என்கிற முறையில் அவரை சந்தித்து நான் வெற்றி பெறுவதற்கு ஆசி வாங்கினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரும் சரிடானு என்னை வாழ்த்தினார். சுப்ணி கையில் சால்வை வைத்திருந்தார். அதனை பை எனவும் பணம் வாங்கி விட்டதாகவும் சிலர் திரித்து பரப்பி விட்டனர். நாங்க ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டதாகவும் கோபாலின் வெற்றி பெறுவதற்காக பணம் வாங்கி கொண்டு விலை போய் விட்டதாகவும் வாய்க்கு வந்தபடி சிலர் பேசி வருகின்றனர். 1962ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட போது அறிஞர் அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் எங்க வீட்டுக்கு வந்தனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர்
தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர்

எங்க திண்ணையில் அழ்பழகனார் என்ற பெயரில் படிப்பகத்தை அண்ணா திறந்து வைத்தார். அப்பா பொண்ணுசாமி அப்போதிலிருந்தே திமுகவில் வட்டசெயலாளராக இருந்தவர். நாங்க பாரம்பர்யமான திமுக குடும்பம். கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால் தலைமை எனக்கு போட்டியிட சீட் வழங்கியிருக்கிறது. அப்படி இருக்கையில் மரியாதை நிமித்தமாக சந்தித்ததை சிலர் சுய ஆதாயத்திற்காக நான் விலை போய் விட்டதாக பேசி வருகின்றனர். என்னை பற்றி திமுகவினருக்கும் தலைமைக்கும் நன்றாக தெரியும். நான் தேர்தலில் வெற்றி பெற்று இதனை பொய் என நிரூபிப்பேன்” என்றார்.

முன்னாள் மேயரும்,கோபால் மனைவியுமான சாவித்திரியிடம் பேசினோம், ``நாங்க காரில் சென்று கொண்டிருந்த போது காரை நிறுத்திய ராமச்சந்திரன், `உங்களை தான் பார்க்க வந்தேன். சால்வை அணிவிக்கனும்’ என்றார். நாங்க `வேண்டாம்’ என சொல்லிட்டு, `உங்க வேலையை நீங்க பாருங்க எங்க வேலையை நாங்க பாக்குறோ’ம் கிளம்பிட்டோம்.

அதிமுக வேட்பாளர் கோபால்
அதிமுக வேட்பாளர் கோபால்

கட்சி வேறு, பழக்க வழக்கம் வேறு எங்க வெற்றிக்காக நாங்க வேலை செய்து வருகிறோம். என் கணவருக்கு வார்டில் மக்கள் ஆதரவு பிரகாசமாக இருக்கிறது. குடும்ப ரீதியான நட்பில் இருப்பவர் யதார்த்தமாக சந்தித்ததை வேண்டாதவர்கள் சிலர் இதனை அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசி பரப்பி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism