Published:Updated:

`வாக்கு எண்ணிக்கைக்கு சம்பந்தம் இல்லாத பெண் அதிகாரி; வீடியோ ஆதாரம்!’ - கரூரில் கொதித்த ஜோதிமணி

ஜோதிமணி, செந்தில் பாலாஜி
ஜோதிமணி, செந்தில் பாலாஜி

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். சட்டப்படி இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தி, எங்களுக்கு உரிய வெற்றியை உறுதிசெய்வோம்.

`தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை முறைகேடாக ஆளுங்கட்சிக்கு சார்பாக மாற்றி அறிவித்ததை நீதிமன்றம் மூலம் நிரூபிப்போம். எங்களின் வெற்றியை உறுதி செய்வோம்" என்கிறார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.

ஜோதிமணி
ஜோதிமணி

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகள் உள்ளன. இவற்றில், 1 மற்றும் 16 வது வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை மாற்றி, போலீஸாரைக் குவித்து, அந்த வார்டுகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டதாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, அதிகாலை 4 மணியிலிருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜியும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் க.பரமத்தி விரைந்தனர். நேற்று காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகள் அதற்கு ரெஸ்பான்ஸ் எதுவும் செய்யாமல் போக, கோபமான ஜோதிமணி, செந்தில் பாலாஜி உள்பட நிர்வாகிகள் பலரும் திரண்டு கரூர் டு கோவை சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

ஜோதிமணி போராட்டம்
ஜோதிமணி போராட்டம்

இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விஷயத்தைக் கேள்விப்பட்ட கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் ஸ்பாட்டுக்கு விரைந்து சென்று, செந்தில் பாலாஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

`4,905 வேட்புமனுக்கள்; களத்தில் கோடீஸ்வர வேட்பாளர்கள்!’- களைகட்டும் கரூர் உள்ளாட்சித் தேர்தல்

இந்நிலையில், தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியோடு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, `ஆளுங்கட்சிக்கு சார்பாக ஒரு அதிகாரி செயல்பட்டார்' என்று கூறி வீடியோ பதிவு ஒன்றைக் காட்டினார். பிறகு பேசிய ஜோதிமணி, "கரூர் மாவட்டம், டி.கூடலூர் மேற்கு 16வது வார்டு ஒன்றிய குழு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லோகநாயகி வெற்றி பெற்ற நிலையில், ஆளும் கட்சியினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றார் எனத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துவிட்டார்.

ஜோதிமணி
ஜோதிமணி

வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி, அ.தி.மு.க வேட்பாளர் கலையரசியைவிட 2 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். இந்த வெற்றியை உடனடியாக அறிவிக்காத தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேண்டுமென்றே காலதாமதம் செய்து, இரண்டு முறை மறு எண்ணிக்கை செய்தனர். அதன் பிறகும், காங்கிரஸ் வேட்பாளரே இரண்டு வாக்குகள் அதிகம் இருந்துள்ளார்.

இந்த நிலையில், மேலும் காலதாமதம் செய்து விடியற்காலை 3.30 மணியளவில் அ.தி.மு.க வேட்பாளர் கலையரசி ரவி வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்துள்ளனர். அதேபோல், 1வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான போட்டியாளராக குணசேகரன் போட்டியிட்டார். அவர்தான் 1வது வார்டில் வெற்றிபெற்றார். ஆனால், அதையும் மாற்றி 1வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் சரவணக்குமார் வெற்றிபெற்றதாக முறைகேடாக அறிவித்துவிட்டார்கள். வாக்கு எண்ணிக்கையிபோது சம்பந்தம் இல்லாத பெண் அதிகாரி ஒருவர் வந்து, ஆளுங்கட்சிக்கு சார்பாகப் பேசி தேர்தல் முடிவை அவர்களுக்கு சாதகமாக மாற்றியுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரம் எங்களுக்குக் கிடைத்துள்ளது.

கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பை மீறி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடத்துள்ளது. வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகளில் வீடியோ பதிவு செய்யப்படவில்லை.
ஜோதிமணி எம்.பி.

அங்கே இருந்த கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பை மீறி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடத்துள்ளது. வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகளில் வீடியோ பதிவு செய்யப்படவில்லை. எங்களுக்கு கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். சட்டப்படி இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தி, எங்களுக்கு உரிய வெற்றியை மீட்டு, உறுதிசெய்வோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு