Published:Updated:

``பாஜக - அதிமுக-வின் பி-டீம்தான் கமல்ஹாசன்" கோத்தகிரியில் ஆ.ராசா காட்டம்!

ஆ.ராசா
ஆ.ராசா

"கமல்ஹாசனின் கட்சியை மூன்றாம் அணி எனச் சிலர் சொல்கிறார்கள்.உண்மையில், மோடி அரசாங்கத்தால் எடப்பாடியின் ஆசியுடன் கண்டுபிடிக்கப்பட்ட பா.ஜ.க., அ.தி.மு.கவின்பி-டீம்தான் இது.’’

நீலகிரி மாவட்டத்தில், மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில் குன்னூர், கூடலூரில் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஊட்டியிலும் போட்டியிடுகின்றன.

ஆ.ராசா
ஆ.ராசா

மூன்று வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும், தி.மு.க துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார்.

குன்னூர் மற்றும் கோத்தகிரியில் நடைபெற்ற தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்துக்குப் பிறகு கோத்தகிரி மார்க்கெட் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எம்.பி ஆ.ராசா,``கட்சியில் அடிமட்டத் தொண்டராக இருந்து படடிப்படியாக பரிணாம வளர்ச்சிப்படி தற்போது பூரணத்தை அடைந்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்தியாவிலேயே அவருக்கு நிகரான தலைவர் கிடையாது. அவருக்கு முன் நிற்க பிரதமர் மோடிக்கும் தகுதி கிடையாது.

கோத்தகிரி பிரசாரத்தில் ஆ.ராசா
கோத்தகிரி பிரசாரத்தில் ஆ.ராசா

கமல்ஹாசனின் கட்சியை மூன்றாம் அணி எனச் சிலர் சொல்கிறார்கள். உண்மையில், மோடி அரசாங்கத்தால் எடப்பாடியின் ஆசியுடன் கண்டுபிடிக்கப்பட்ட பா.ஜ.க - அ.தி.மு.கவின் பி-டீம்தான் மக்கள் நீதி மய்யம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகூட மாநில உரிமைகளை ஓரளவுக்குக் காப்பாற்றினார். ஆனால் எடப்பாடியோ பா.ஜ.க-விடம் சரணடைந்துவிட்டார். ஏரோபிளேன் வைத்திருப்பவர்களெல்லாம் தன்னை பைலட் என்று சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் சொந்தமாக நிலம்கூட வைத்திருக்காத எடப்பாடி பழனிசாமியோ தன்னை விவசாயி என அறிவித்துக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு