Election bannerElection banner
Published:Updated:

கன்னியாகுமரி - தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

கோவில்பட்டி
கோவில்பட்டி

திருமணம் செய்துகொள்ளாமல் மக்கள் பணி்யாற்றுபவர், காலில் செருப்புகூட அணியாத எளிமையானவர் என எம்.ஆர்.காந்திக்குத் தொகுதி முழுவதும் நல்ல அபிப்ராயம் இருக்கிறது

கன்னியாகுமரி

அ.தி.மு.க சார்பில் தளவாய் சுந்தரமும் தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆஸ்டினும் போட்டியிடுகிறார்கள். ஆளுங்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தொகுதி முழுவதும் பல நலத்திட்டப் பணிகளைச் செய்திருக்கிறார் தளவாய் சுந்தரம். தொகுதியில் கணிசமாக இருக்கும் பா.ஜ.க ஓட்டுகள் தளவாய் சுந்தரத்துக்கு ப்ளஸ். மத்திய அரசு கன்னியாகுமரியில் செயல்படுத்தவிருக்கும் வர்த்தக துறைமுகத் திட்டத்தை, கடற்கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அதனால், மீனவர்கள் மற்றும் கடலோர கிராம சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஆஸ்டினுக்குச் சாதகமாக இருக்கின்றன. தொகுதியில் இழுபறிநிலைதான்!

கன்னியாகுமரி - தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

நாகர்கோவில்

தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன், பா.ஜ.க மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி ஆகியோருக்கு இடையேதான் போட்டி. திருமணம் செய்துகொள்ளாமல் மக்கள் பணி்யாற்றுபவர், காலில் செருப்புகூட அணியாத எளிமையானவர் என எம்.ஆர்.காந்திக்குத் தொகுதி முழுவதும் நல்ல அபிப்ராயம் இருக்கிறது. இருப்பினும், இவையெல்லாமே ஓட்டுகளாக மாறுவது சந்தேகமே. மக்கள் பிரச்னைக்காகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதில் கிடைத்த நற்பெயர், காங்கிரஸ் கூட்டணியின் பலம் ஆகியவை சுரேஷ் ராஜனுக்கு ப்ளஸ். சுரேஷ் ராஜனே மீண்டும் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்வார்.

குளச்சல்

தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் பிரின்ஸ் காங்கிரஸ் சார்பிலும், குமரி.பா.ரமேஷ் பா.ஜ.க சார்பிலும் களத்தில் மோதுகிறார்கள். தொகுதியில் கணிசமாக இருக்கும் பா.ஜ.க ஓட்டுகள் ரமேஷுக்கு ப்ளஸ். ஆனால், மீனவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களின் ஓட்டுகள் பிரின்ஸுக்குத்தான் கிடைக்கும் என்பதால், இம்முறையும் குளச்சல் தொகுதியை பிரின்ஸ் தக்கவைத்துக்கொள்வார்.

கன்னியாகுமரி - தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

பத்மநாபபுரம்

தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ மனோ தங்கராஜ், அ.தி.மு.க-வின் ஜாண் தங்கம் ஆகியோர் மோதுகிறார்கள். ஜாண் தங்கம் கிறிஸ்தவர் என்றாலும் பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால், சிறுபான்மை வாக்குகள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. தொகுதி மக்களிடம் கொஞ்சம் அதிருப்தி இருந்தாலும், அவர்களின் பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை மனோ தங்கராஜுக்குத்தான் சாதகமாக இருக்கிறது. அதனால், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பத்மநாபபுரத்தை மனோ தங்கராஜ் தக்கவைத்துக்கொள்வார்.

விளவங்கோடு

காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ விஜயதரணியும் பா.ஜ.க-வின் ஜெயசீலனும் மோதுகிறார்கள். கொரோனா காலத்தில் தொண்டு நிறுவனம் மூலம் களப்பணியாற்றியவர் என்பதால், மக்கள் மத்தியில் பரிச்சயமுள்ளவர்தான் ஜெயசீலன். விஜயதரணி மீது சில அதிருப்திகள் இருந்தாலும், ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பிறகு நிலைமை மாறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாமுவேல் ஜார்ஜ், சுயேச்சையாகக் களமிறங்கியிருந்தாலும் அது விஜயதரணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. தொகுதியில் நிலவும் பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையால், அதிக வாக்கு வித்தியாசத்தில் விளவங்கோட்டை விஜயதரணியே தக்கவைத்துக்கொள்வார்.

கன்னியாகுமரி - தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

கிள்ளியூர்

காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், த.மா.கா சார்பில் ஜூட் தேவ் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். ஜூட் தேவ், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ குமாரதாஸின் மகன் என்பதால் தொகுதியில் அறிமுகம் உள்ளது. இந்தத் தொகுதிக்குட்பட்ட இனயம் கிராமத்தில்தான் வர்த்தக துறைமுகம் அமைவதாக இருந்தது. அதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய ராஜேஷ்குமாருக்குக் கிடைக்கவிருக்கும் மீனவர்களின் ஓட்டுகள் மற்றும் சிறுபான்மையினரின் ஓட்டுகள் வெற்றியை எளிதாக்குவதால், அதிக வாக்கு வித்தியாசத்தில் கிள்ளியூரை ராஜேஷ்குமார் தக்கவைத்துக்கொள்வார்.

விளாத்திகுளம்

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சின்னப்பன், தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், அ.ம.மு.க-வில் சீனிசெல்வி போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க வாக்குவங்கி சின்னப்பனுக்கு ப்ளஸ். தொகுதியில் பெரிய அளவிலான திட்டங்கள் நிறைவேற்றப்படாததும், மக்களிடம் சரியான அணுகுமுறை இல்லாததும் சின்னப்பனுக்கு மைனஸ். எளிமையான அணுகுமுறை மார்க்கண்டேயனுக்கு ப்ளஸ். இதற்கு முன்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாகவும், தொகுதிச் செயலாளராகவும் இருந்த அனுபவம் அவருக்குக் கைகொடுக்கிறது. கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் முந்துகிறது.

கன்னியாகுமரி - தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தூத்துக்குடி

த.மா.கா-வில் விஜயசீலனும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கீதா ஜீவனும், தே.மு.தி.க-வில் சந்திரனும் போட்டியிடுகின்றனர். சந்திரன் தொகுதிக்குப் புதுமுகம். தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஜீவன் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். இவர் பெரிய அளவில் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றாலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் ஆளுங்கட்சி மீதான மக்களின் அதிருப்தி, கீதா ஜீவனுக்கு ப்ளஸ். விஜயசீலன் அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டாலும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டுவது மைனஸ். தி.மு.க-வே முந்துகிறது.

திருச்செந்தூர்

அ.தி.மு.க-வில் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், அ.ம.மு.க-வில் வடமலை பாண்டியன் களமிறங்கியுள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க-வில் தொடர்ந்து இருபதாண்டுகளாக எம்.எல்.ஏ-வாக உள்ள அனிதாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உள்ளது. மற்ற இரு வேட்பாளர்களுமே அறிமுகமில்லாதவர்கள். தொகுதியில் பெரிய அளவில் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றாலும், அனிதாவின் செல்வாக்கு குறையவில்லை. தான் சார்ந்த நாடார் ஓட்டுகள் மட்டுமன்றி, சிறுபான்மையினர் வாக்குகளும் கிடைப்பதால் ஓரளவு கணிசமான வாக்குகளில் அனிதாவே முந்துகிறார்.

கன்னியாகுமரி - தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

ஸ்ரீவைகுண்டம்

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகநாதன், காங்கிரஸில் ஊர்வசி அமிர்தராஜ், அ.ம.மு.க-வில் ஏரல் ரமேஷ் மோதுகிறார்கள். அ.தி.மு.க வாக்குவங்கியும், தான் சார்ந்த இந்து நாடார் வாக்குகளும் சண்முகநாதனுக்கு ப்ளஸ். இவர் ஏற்கெனவே இருமுறை எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்தும், தொகுதிக்குச் சொல்லும்படியாக எதுவும் செய்யவில்லை. அ.ம.மு.க பிரிக்கும் ஓட்டுகளும், சாத்தான்குளம் காவல் நிலைய தந்தை - மகன் படுகொலையும் இவருக்கு மைனஸ். தி.மு.க., காங்கிரஸ் வாக்குகள், தான் சார்ந்த கிறிஸ்தவ நாடார் வாக்குகள் ஊர்வசிக்கு ப்ளஸ். வெளியூர் வேட்பாளர் என்பது மட்டும் மைனஸ். ஆனாலும் ‘கை’ ஓங்குகிறது.

ஓட்டப்பிடாரம் (தனி)

அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ மோகன், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகையா, புதிய தமிழகம் கட்சியில் டாக்டர் கிருஷ்ணசாமி மோதுகிறார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, முந்தைய இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும் அதே வாக்குவங்கியைத் தக்கவைத்திருக்கிறார் சண்முகையா. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், ஆளுங்கட்சிமீது மக்கள் கடும் அதிருப்தியிலிருக்கிறார்கள். தேவேந்திர குல வேளாளர் பெயர் விவகாரமும் ஆளுங்கட்சிக்கு மைனஸ். கிருஷ்ணசாமிக்கு ஓரளவுக்கு வாக்குவங்கி இருந்தாலும், கொரோனா காலத்தில்கூட தொகுதிக்குள் தலைகாட்டவில்லை என்பது மைனஸ். அவரது பிரசாரமும் எடுபடவில்லை. இதனால், தி.மு.க முந்துகிறது.

கன்னியாகுமரி - தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

கோவில்பட்டி

அ.தி.மு.க-வில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், சி.பி.எம் கட்சியில் சீனிவாசனும், அ.ம.மு.க-வில் டி.டி.வி.தினகரனும் மோதுகிறார்கள். அடிப்படை வசதிகளை நிறைவேற்றாதது கடம்பூர் ராஜூவுக்கு மைனஸ். சீனிவாசன் மக்களுக்குப் பரிச்சயமானவர். இடதுசாரிகளின் வாக்குவங்கி, தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாக்குகளை இவர் நம்பினாலும், கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லை. தினகரன் முக்குலத்தோர் வாக்குகளை நம்புகிறார். தினகரன் தரப்பினர் மாணிக்கராஜா மூலம் கயத்தார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளை நன்றாக ‘கவனித்து’விட்டார்கள். அமைச்சரும் பணபலத்தையே நம்பியிருக்கிறார். மும்முனைப் போட்டி கடுமையாக இருப்பதால் நிலைமை இழுபறியே!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு