Published:Updated:

``ஒரு கோடி கொசுக்களையும், ஆயிரம் எலிகளையும் ஒழிப்பேன்'' - சுயேச்சை வேட்பாளர் நூதன முறையில் பிரசாரம்!

எலிப்பொறியோடு வாக்கு சேகரிக்கும் ராஜேஷ் கண்ணன் ( நா.ராஜமுருகன் )

கரூர் மாநகராட்சியில் போட்டியிட முதல் ஆளாக, தனது குடும்பத்தினரோடு வந்து வேட்புமனு தாக்கல் செய்தவர், தற்போது முதல் ஆளாக வித்தியாசமான முறையில் வாக்குச் சேகரித்துவருகிறார்.

``ஒரு கோடி கொசுக்களையும், ஆயிரம் எலிகளையும் ஒழிப்பேன்'' - சுயேச்சை வேட்பாளர் நூதன முறையில் பிரசாரம்!

கரூர் மாநகராட்சியில் போட்டியிட முதல் ஆளாக, தனது குடும்பத்தினரோடு வந்து வேட்புமனு தாக்கல் செய்தவர், தற்போது முதல் ஆளாக வித்தியாசமான முறையில் வாக்குச் சேகரித்துவருகிறார்.

Published:Updated:
எலிப்பொறியோடு வாக்கு சேகரிக்கும் ராஜேஷ் கண்ணன் ( நா.ராஜமுருகன் )

இதுவரை நகராட்சியாக இருந்துவந்த கரூர், தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 48 வார்டுகள்கொண்ட கரூர் மாநகராட்சியில் 26-வது வார்டில் சுயேச்சையாக ராஜேஷ் கண்ணன் என்பவர் போட்டியிடுகிறார். சமூக ஆர்வலரான இவர், மணல் கொள்ளைக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில், கரூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

எலிப்பொறியோடு வாக்கு சேகரிக்கும் ராஜேஷ் கண்ணன்
எலிப்பொறியோடு வாக்கு சேகரிக்கும் ராஜேஷ் கண்ணன்
நா.ராஜமுருகன்

அப்போது, தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் போட்டோக்களுடன்கூடிய முகமூடியை அணிந்துகொண்டு, 'இரண்டு பேரும் சண்டை போடாமல், மக்களுக்கு நல்லது பண்ணுங்க' என்று அறிவுரை கூறுவதுபோல், வித்தியாசமாக வாக்குச் சேகரித்தார். இந்த நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார். கொரோனா காலத்தில் வீட்டுக்கு வீடு குப்பைக் கூடை கொடுத்தது, மாஸ்க் வழங்குவது, கொரோனா விழிப்பு உணர்வு செய்வது எனப் பல்வேறு விஷயங்களைச் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கரூர் மாநகராட்சியில் போட்டியிட முதல் ஆளாக, தனது குடும்பத்தினரோடு வந்து வேட்புமனு தாக்கல் செய்தவர், தற்போது முதல் ஆளாக வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்துவருகிறார். இன்று காலை தான் போட்டியிடும் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற முருகன் ஆலயத்தில் வழிபாடு நடத்திவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து வாக்குச் சேகரிப்பைத் தொடங்கினார்.

முருகன் கோயிலில் ராஜேஷ் கண்ணன்
முருகன் கோயிலில் ராஜேஷ் கண்ணன்
நா.ராஜமுருகன்
 எலிப்பொறியோடு வாக்கு சேகரிக்கும் ராஜேஷ் கண்ணன்
எலிப்பொறியோடு வாக்கு சேகரிக்கும் ராஜேஷ் கண்ணன்
நா.ராஜமுருகன்

அப்போது, தன் இரண்டு மகன்களின் கைகளில், எலிப்பொறி கூண்டுகளைக் கொடுத்து, அதில் பிடிக்கப்பட்ட எலிகளுடன் மக்களிடம் வாக்குகளைச் சேகரித்தார். மேலும் வாக்குச் சேகரிக்கும் ஒவ்வொரு நாளும் நூதன திட்டத்தை அறிவிப்பு செய்து, வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். இன்று முதல் நாளில் தான் போட்டியிடும் வார்டுகளில் ஒரு கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான்பூச்சிகள், 1,000 எலிகள், 100 தெருநாய்கள் ஆகியவற்றை ஒழிப்பதாக உறுதிமொழி அளிக்கும் துண்டறிக்கையை, வாக்காளர்களுக்கு விநியோகித்து வாக்குச் சேகரித்தார். அவரின் வித்தியாசமான வாக்குச் சேகரிக்கும் முறை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து, நாம் ராஜேஷ்கண்ணனிடம் பேசினோம். ``நான் பல பொதுப் பிரச்னைகளுக்காகப் பல்வேறு அமைப்புகளோடு சேர்ந்து பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். எனது வார்டில் உள்ள பொதுப்பிரச்னைகளை தீர்க்க, முதல் ஆளாகப் பல முயற்சிகளை செய்திருக்கிறேன். அதனால், என்னைப் பலரும், 'மக்கள் கவுன்சிலர்' என்று சொல்லும் அளவுக்கு, வார்டில் மக்களின் தோழனாக இருந்திருக்கிறேன். அதனால், வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றால், மக்களுக்கு இன்னும் பல நல்ல விஷயங்களைச் செய்ய முடியும் என்று தேர்தலில் போட்டியிடுகிறேன்.

எலிப்பொறியோடு வாக்குச் சேகரிக்கும் ராஜேஷ் கண்ணன்
எலிப்பொறியோடு வாக்குச் சேகரிக்கும் ராஜேஷ் கண்ணன்
நா.ராஜமுருகன்

சாத்தியமாகும் திட்டங்களை தினம் ஒரு வாக்குறுதியாக அறிவித்து, மக்களிடம் வாக்குச் சேகரிக்கவிருக்கிறேன். வார்டில் உள்ள மக்களுக்குத் தொந்தரவாக இருக்கும் எலி, நாய், கொசு, கரப்பான்பூச்சி பிரச்னைகளைத் தடுக்க வித்தியாசமான முறையில் வாக்குறுதி கொடுத்து வாக்குச் சேகரித்தேன். மக்களுக்காகத் தொடர்ந்து உழைக்கும் என்னை வார்டு மக்கள் கண்டிப்பாக ஜெயிக்கவைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism