Published:Updated:

`நேர்மையான அரசியல்தான் இலக்கு!' -இளநீர் மாலையோடு வாக்குசேகரித்த சட்டக் கல்லூரி மாணவர்

சுயேச்சையாகக் களம் காணும் அர்ஜுனன், சென்னை சட்டக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்.

வேட்பாளர் அர்ஜுனன்
வேட்பாளர் அர்ஜுனன்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய தேர்தல் களத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர், கழுத்தில் இளநீர்க் காய்களை மாலையாக அணிந்தும் கைகளில் தென்னை ஓலைகளுடனும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரசாரத்தில் சுயேச்சை வேட்பாளர்
தேர்தல் பிரசாரத்தில் சுயேச்சை வேட்பாளர்

பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட கவுன்சில்களுக்கு வரும் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முதுகுளத்தூரை அடுத்த பொன்னக்கனேரி ஊராட்சி ஒன்றிய 15-வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அர்ஜுனன் என்பவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவருக்குக் குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

`100 ரூபாய்க்கு சிலிண்டர்; சோலார் மூலம் மின்சாரம்!' -சாட்டை, மரக்கன்றுடன் அசத்தும் வேட்பாளர்

முதுகுளத்தூர் 15 -வது ஒன்றிய கவுன்சிலர் வார்டில் பொன்னக்கரனேந்தல், தாழியரேந்தல், மட்டியரேந்தல், தெய்வானம், புஷ்பவனம், பொக்கேனேரி, வளநாடு ஆகிய கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த வார்டில் சுயேச்சையாகக் களம்காணும் அர்ஜுனன் சென்னை சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஆவார்.

நூதன தேர்தல் பிரசாரதில் சுயேச்சை வேட்பாளர்
நூதன தேர்தல் பிரசாரதில் சுயேச்சை வேட்பாளர்

இதையடுத்து, வாக்காளர் மத்தியில் தங்களது சின்னத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுயேச்சை வேட்பாளர் அர்ஜுனன், கழுத்தில் இளநீர்காய்களை மாலையாக அணித்து கொண்டும் கைகளில் தென்னை ஓலை மட்டைகளை வைத்துக் கொண்டும் வீடு வீடாகச் சென்று வினோதமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

''இளைஞர்கள் நேர்மையான, வெளிப்படையான அரசியலில் ஈடுபட வேண்டும். நான் வெற்றிபெற்றால் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் படிக்கும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற உதவும் வகையில் நூலகம் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்'' என்ற வாக்குறுதிகளுடன் கிராமத்தை வலம்வந்து வாக்கு சேகரித்தார்.