Published:Updated:

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் 2 கட்டமாக வாக்குப்பதிவு! - அக்டோபர் 12-ல் வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டிருக்கிறது. மாநில தேர்தல் ஆணையர், செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு
சித்தரிப்பு படம்

``தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும். இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 15-ம் தேதி தொடங்கும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 22 -ம் தேதி.

வேட்புமனுக்கள் பரிசீலனை செப்., 23 -ம் தேதியும் வேட்புமனுவை திரும்ப பெற கடைசி தினம், செப்., 25-ம் தேதியும் நடைபெறும். வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடைபெறும். அதன்படி அக்டோபர் மாதம் 6 -ம் தேதி முதற்கட்ட தேர்தலும், அக்டோபர் 9-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறும்.

உள்ளாட்சி ஆயுதம்; சூடாகும் ஜெ. பல்கலைக்கழக விவகாரம்; காய்நகர்த்தும் அதிமுக!

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் மாதம் 12 -ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்தலில் நான்குவிதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது விடுபட்ட 789 இடங்களுக்கான தேர்தல் 9/10/2021 ஒரே கட்டமாக நடக்கும்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு