Published:Updated:

உள்ளாட்சி உய்யலாலா!

உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி உய்யலாலா!

கட்சி தாவுபவர்களை புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் மேலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

உள்ளாட்சி உய்யலாலா!

கட்சி தாவுபவர்களை புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் மேலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Published:Updated:
உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி உய்யலாலா!

ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்!

நெல்லை மாவட்டத்தில், வழக்கத்தைவிட பெண்கள் பலர் தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் களமிறங்கியிருக்கிறார்கள். குறிப்பாக மானூர், ராதாபுரம் யூனியன் பகுதிகளிலுள்ள கிராமப் பஞ்சாயத்து பதவிகளைப் பிடிக்க வரிசைகட்டுகிறார்கள் பெண்கள். அவர்களில் பலரும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் என்பதுதான் இதிலிருக்கும் விசேஷம். படித்த பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்தப் பகுதி மக்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்திருப்பதால், வழக்கமாகப் போட்டியிடும் கரைவேட்டிகள் விழிபிதுங்கியிருக்கிறார்கள்!

உள்ளாட்சி உய்யலாலா!
உள்ளாட்சி உய்யலாலா!
உள்ளாட்சி உய்யலாலா!

சாலைமறியலின் பின்னணியில் பொன்முடி?

கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க-வில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அங்கு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, தெற்கு மாவட்டப் பொறுப்பாளரான எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனும், வடக்கு மாவட்டப் பொறுப்பாளரான எம்.எல்.ஏ உதயசூரியனும் கைகோத்திருக்கிறார்கள். இந்த மாவட்டத்தின் கோட்டலம் ஊராட்சி ஒன்றியத்தின் கவுன்சிலர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதை முன்னாள் துணைத் தலைவர் முரளி, தன் மனைவி ரூபாவுக்காகக் கேட்டிருக்கிறார். ஆனால், அவரை ஓரங்கட்டிவிட்டு, தன் ஆதரவாளரான செல்வராஜின் மனைவி கௌரியை முன்னிறுத்தியிருக்கிறார், மாவட்டப் பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன். இதில் கடுப்பான முரளியின் ஆதரவாளர்கள், சுமார் ஒரு மணி நேரம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். பொன்முடியின் ஆதரவாளரான முரளியின் மனைவி பதவிக்கு வந்துவிட்டால், அவர் தங்கள் சொல்பேச்சு கேட்க மாட்டார் என்று நினைக்கும் உதயசூரியனும் வசந்தம் கார்த்திகேயனும், செல்வராஜ் தங்கள் கைக்கு அடக்கமாக இருப்பார் என்று கணக்கு போடுகிறார்கள். இதற்கிடையே கட்சிக்கு எதிராக நடந்த சாலைமறியலின் பின்னணியில் பொன்முடி இருக்கிறார் என்று இரு மாவட்டப் பொறுப்பாளர்களும் அறிவாலயத்துக்குப் புகாரைத் தட்டிவிட்டிருக்கிறார்களாம்!

உள்ளாட்சி உய்யலாலா!

போஸ்டர் அறிவிப்பு... வெலவெலத்துப்போன வேட்பாளர்கள்!

‘ஊராட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவுடன், தேர்தலுக்குச் செலவு செய்ததை ஊராட்சி வளர்ச்சிக்காக வரும் பணத்தில் எடுத்துவிடலாம் என்று நினைத்து யாரும் வர வேண்டாம். கிராமசபைக் கூட்டங்களில் வரவு, செலவு கணக்குக் கேட்கப்படும். அந்தத் தகவல்கள் தகவல் அறியும் சட்டத்தில் கேட்டு சரிபார்க்கப்படும். ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால், ஊழல் செய்தவரின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதுடன், புகாரும் அளிக்கப்படும்’ - என்ன இது என்று பார்க்கிறீர்களா? வேறொன்றும் இல்லை... தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமப் பஞ்சாயத்தில் இளைஞர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர்தான் இது. இதைப் பார்த்து வேட்பாளர்கள் இப்போதே வெலவெலத்துப்போயிருக்கிறார்கள்!

உள்ளாட்சி உய்யலாலா!

நேருக்கு நேர் மோதும் மாமியார், மருமகள்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே இருக்கும் சாலவாக்கம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மாமியார் மதுரம், மருமகள் சத்யா ஆகியோர் எதிரெதிராகப் போட்டியிடுகிறார்கள். இதே பகுதியில் சிறுமையிலூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாதவனின் மனைவி சுகுணாவும், அவரின் தம்பி தயாநிதியின் மனைவி ரூபிதாவும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். இவர்கள் இப்படியென்றால், வாலாஜாபாத் அருகிலிருக்கும் நத்தாநல்லூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மணி-ராணி தம்பதியர் இருவருமே போட்டியிடுகிறார்கள். ஏரியாவாசிகளோ, “இவங்க எதிரும் புதிருமா காட்டிக்கிட்டாலும், யார் ஜெயிச்சாலும் அந்தக் குடும்பத்துக்குத்தானே லாபம்... நல்லா போடுறாங்க கணக்கு!” என்று கண்சிமிட்டுகிறார்கள்!

உள்ளாட்சி உய்யலாலா!

சாபம்விட்ட வேலுமணி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், செப்டம்பர் 18-ம் தேதி நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியது மாவட்ட நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘கட்சி தாவுபவர்களை புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் மேலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கட்சி தாவுபவர்கள் உருப்படவே மாட்டீர்கள்” என்று சாபம்விடுவதுபோலப் பேசியதுதான் நிர்வாகிகளின் அதிர்ச்சிக்குக் காரணம். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் கட்சி தாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதை அறிந்தே வேலுமணி இப்படிப் பேசினாராம்!

ஒரு தரம்... ரெண்டு தரம்... விழுப்புரத்தில் ஏலமோ ஏலம்!

உள்ளாட்சித் தேர்தல் வந்தாலே பதவிகள் ஏலம் விடப்படும் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சியில் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கும், வார்டு உறுப்பினர்கள் பதவி 30,000 ரூபாய்க்கும் துத்திப்பட்டு கிராமத்தினரால் ஏலம்விடப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, செப்டம்பர் 18-ம் தேதி அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாதவர்கள், அன்றைய தினம் இரவோடு இரவாக ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான ஏலத்தையும் நடத்தி முடித்துவிட்டார்களாம். அ.தி.மு.க., தி.மு.க கட்சிகள் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர்களையே இன்னும் அறிவிக்காத நிலையில், துத்திப்பட்டு ஏரியாவுக்காக ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரை 20,08,000 ரூபாய்க்கு ஒன்றிய கவுன்சிலராக ஏலத்தில் இறுதிசெய்திருக்கிறார்கள். இதையடுத்து பொன்னாங்குப்பம் ஊராட்சி துணைத் தலைவர் பதவியும் ஏலம்விடப்படும் என்று வந்த தகவலால் டென்ஷனாகியிருக்கிறது மாவட்ட நிர்வாகம். இதேபோல காணை ஒன்றியத்தை அடுத்த சித்தேரி ஊராட்சியிலும் தலைவர் பதவிக்கு ஏலம் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்திருக்கிறது.