Published:Updated:

‘எம்.ஜி.ஆரிடம் சொன்னேன், துரைமுருகனுக்கு சட்டை வாங்கிக் கொடுத்தார்!’- மதுசூதனன் சொல்லும் ஃப்ளாஷ்பேக்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

‘‘மாற்று சட்டை இல்லாமல் கஷ்டப்பட்ட துரைமுருகனுக்கு, எம்.ஜி.ஆர் தான் உதவினார். அப்படிப்பட்ட தலைவருக்கே துரோகம் செய்து அவமானப்படுத்திய துரைமுருகனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்று அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் காட்டமாகக் கூறினார்.

மதுசூதனன்
மதுசூதனன்

வேலூரில் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சஞ்சீவிராயன் கோயில் தெருவில் மாணவர் முழக்கம் நடைபெற்றது.

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

அப்போது, ஒரு சட்டைக்கு மாற்று சட்டை இல்லாத துரைமுருகன், 15 ரூபாய் கொடுத்தால் இன்னொரு சட்டை வாங்கிக்கொள்வேன் என்றார். இந்த விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் நான் சொன்னேன். 

உடனே அவர் சட்டை, பேன்ட், ஷூ, வாட்ச் போன்றவற்றை துரைமுருகனுக்கு வாங்கிக்கொடுத்தார். அது மட்டுமா? துரைமுருகன், முரசொலி மாறனுக்கு கல்லூரியில் படிக்க பணம் கொடுத்து உதவினார்.

‘‘எம்.ஜி.ஆரை அவமானப்படுத்திய துரைமுருகனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.’’
மதுசூதனன்

நன்றியை மறந்த துரைமுருகன், கருணாநிதியோடு சேர்ந்துகொண்டு சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தினார். இந்த துரோகிக்கு, எம்.ஜி.ஆரின் தொண்டன் பாடம் கற்பிக்க வேண்டும். 

இந்தத் தேர்தலில், துரைமுருகனையும் அவர் மகனையும் தோற்கடிக்க வேண்டும். அ.தி.மு.க-வால் பிழைத்து, சம்பாதித்தவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும். பொய், பித்தலாட்டம் செய்வதில் கருணாநிதியையே ஸ்டாலின் மிஞ்சிவிட்டார்’’ என்றார்.

துரைமுருகன்
துரைமுருகன்

எம்.பி. வைத்தியலிங்கம் பேசுகையில், ‘‘ஆட்சி என்பது துண்டு போன்றது; கட்சி என்பது வேட்டி போன்றது; வேட்டி போய்விட்டால் அவமானம்; கட்சி இருந்தால் துண்டை பெற்றுக்கொள்ளலாம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப்பார்க்க முடியாது’’ என்றார்.

ஆஹா.. மதுசூதனன் என்ன திடீர்னு இப்படி பாய்ச்சல் காட்றாரே! ஹ்ம்ம்.. சரி! மதுசூதனன் 'வரலாறு' எப்படி இருக்குன்னு APPAPPO டீம்கிட்ட கேட்டோம். 1970sல மதுசூதனன் எப்படி இருந்தார்? 'எப்படியெல்லாம்' இருந்தார்னு ஒரு கட்டுரையை வாட்ஸ்-அப்ல ஷேர் பண்ணாங்க! அதுல வர்ற ஒரு பத்தி இது!

"1982-ல் ஜெயலலிதா பிரவேசம். போயஸ் கார்டனுக்கும் ராமாவரம் தோட்டத்துக்கும் மெஸஞ்சராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர் மதுசூதனன். எம்.ஜி.ஆர். பற்றி மட்டுமல்ல அனைத்துக் கட்சிக்காரர்களின் நடவடிக்கைகளையும், அவர் பாஷையிலேயே சொல்ல வேண்டுமானால் 'போட்டுக் கொடுப்பது' என்பது - தலைவியிடம்தான்"

இவர் எப்படியெல்லாம் மாறிய மனுஷன் தெரியுமா?

மதுசூதனன்
மதுசூதனன்

1994ல எழுதப்பட்ட அந்த ஸ்பெஷல் கட்டுரை, உங்க APPAPPO ஹோம்பேஜ்ல இப்பவே ரெடியா இருக்கு! -> http://bit.ly/Madhu1994