Published:Updated:

மகாராஷ்டிராவில் கால்பதித்த ஆம் ஆத்மி - `நீயா... நானா’ போட்டியில் பா.ஜ.க - சிவசேனா!

வெற்றிக் கொண்டாட்டத்தில் பா.ஜ.க வேட்பாளர்
வெற்றிக் கொண்டாட்டத்தில் பா.ஜ.க வேட்பாளர்

மகாராஷ்டிராவில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடாததால், எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியும் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கிவிட்டது.

மகாராஷ்டிராவில் கடந்த 15-ம் தேதி, 33 மாவட்டங்களில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 18-ம் தேதி எண்ணப்பட்டன. இந்தத் தேர்தலில் வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடவில்லை. ஆனால், வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் தேர்வு செய்ததாகத் தெரிகிறது. 1,665 பஞ்சாயத்துகளில் மொத்தமுள்ள 1,25,709 இடங்களில் 26,618 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தப் பதவிகள் பெரும்பாலும் உள்ளூரில் பணத்துக்காக ஏலம்விடப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணத் தொடங்கியதிலிருந்தே பா.ஜ.க., தாங்கள்தான் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளோம் என்று கூறிவருகிறது. மற்றொரு பக்கம் சிவசேனாவும், `நாங்கள்தான் அதிக இடங்களில் வெற்றி பெற்ற்றிருக்கிறோம்’ என்று தெரிவித்துவருகிறது. இரண்டு நாள்களாக வாக்குகள் எண்ணப்பட்டதில் காங்கிரஸ், தாங்கள் 2,513 இடங்களிலும், சிவசேனா 3,108 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 2,399 இடங்களிலும், பாஜக 2,263 இடங்களிலும் வெற்றிபெற்றிருப்பதாகக் கூறியிருக்கிறது. சிவசேனாவோ, தாங்கள் 3,113 இடங்களிலும், பா.ஜ.க 2,632 இடங்களிலும், காங்கிரஸ் 1,823 இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பதாகச் சொல்கிறது. மற்றொரு பக்கம் பா.ஜ.க தாங்கள் 5,781 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறது. இதனால் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

`பா.ஜ.க தலைமையகம்!’ - மும்பை அமலாக்கத்துறை அலுவலகம் முன் பேனர் வைத்த சிவசேனா

இந்தத் தேர்தலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா அதிக இடங்களில் வெற்றிபெற்றிருப்பதை மட்டும் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டிருக்கிறது. பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும்போதுதான் எந்தக் கட்சிக்கு, எத்தனை பஞ்சாயத்துகள் கிடைத்திருக்கின்றன என்ற விவரம் தெரியவரும். இந்தத் தேர்தலில் புதிய திருப்பமாக சத்தமே இல்லாமல் ஆம் ஆத்மி கட்சி சாதனை செய்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 13 மாவட்டங்களில் 300 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இவர்களில் 96 பேர் அதாவது 30 சதவிகித வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

யவத்மால் மாவட்டத்தில் அதிகபட்சமாக 41 இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. லாத்தூர், நாக்பூர், சோலாப்பூர், நாசிக், கோண்டியா, சந்திராப்பூர், பால்கர், அகமத்நகர், ஹின்கோலி, ஜல்னா, யவத்மால், பண்டாரா ஆகிய மாவட்டங்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மண்ணின் மைந்தர்களுக்காகப் போராடும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனாவைவிட ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு