Published:Updated:

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் `ஸ்பாட் ராஜினாமா' - கோவையில் கமல் உறுதி!

கமல்

`ஊழலுக்கும்... ஊழலுக்கும்தான் தற்போது போட்டி. அதனால், மக்கள் சார்பு நிலையை எடுக்கக் கூடாது.' - கமல்ஹாசன்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் `ஸ்பாட் ராஜினாமா' - கோவையில் கமல் உறுதி!

`ஊழலுக்கும்... ஊழலுக்கும்தான் தற்போது போட்டி. அதனால், மக்கள் சார்பு நிலையை எடுக்கக் கூடாது.' - கமல்ஹாசன்

Published:Updated:
கமல்

மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன், கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தன் கட்சி வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து, கோவை தாஜ் விவான்டா நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எத்தனை சீட்டு பெறுவீர்கள் என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு கமல், ``எங்களுக்கு வாய்ப்பு மட்டும் கொடுங்க, மக்கள் நீதி மய்யத்திற்கு சீட்டு வேண்டாம் தெரு போதும். நாங்க துடைப்பக் குச்சியுடன் காத்திருக்கிறோம். தெருக்களை சுத்தம் செய்ய ரெடியா இருக்கோம். இது ஆம் ஆத்மி துடைப்பம் இல்லை இது தமிழ் துடைப்பம்!" என்றார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ``9 மாதங்களாக இதுவரை தி.மு.க-வினர் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் மட்டும் வாக்குகளை அள்ளி போட கேட்கிறார்கள். பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் அள்ளி குப்பையில் தள்ளி விடுகிறார்கள். ஆனால், மக்கள் நீதி மய்யம் அதற்காக போட்டியிடவில்லை. நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் `ஸ்பாட் ராஜினாமா' செய்வோம் என பாண்டு பேப்பரில் அச்சடித்து வீடு வீடாக கொடுத்திருக்கிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த இரண்டு கழகங்களும், இப்போது ஒரு குழந்தைத்தனமான நவீன யுக்தியை கையில் எடுத்திருக்கிறார்கள். `கமல்ஹாசனுக்கு ஓட்டு போடாதீங்க... அப்புறம் மோடி ஜெயித்து விடுவார்' என்கிறார்கள். அப்படியென்றால் மோடி ஜெயிக்கவா நான் இங்கே வந்திருக்கிறேன்? பிரதமராக இருக்கிறவர் எப்படி கவுன்சிலர் ஆக முடியும்?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஊழலுக்கும்... ஊழலுக்கும்தான் தற்போது போட்டி. அதனால், மக்கள் சார்பு நிலையை எடுக்கக் கூடாது. தமிழகத்தில் கிராமசபை கூட்டங்களைப் போல நகரங்களில் ஏரியா சபை நடத்தப்படும் என்பதை இங்கே வாக்குறுதியாக அளிக்கிறேன். நீட்டை ஒழிப்பேன் என்றவர்கள் தற்போது நீட்டுக்கு வகுப்பு நடத்துவேன் என பிரசாரம் செய்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தில் கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு மரக்கன்று வழங்கப்படும்" என்றார்.