Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: மூடிய சிலை முன்பு வேட்பாளர் அறிமுகம்! - கைகலப்பில் முடிந்த அதிமுக கூட்டம்

 அதிமுக-வினர் கைகலப்பு
அதிமுக-வினர் கைகலப்பு

``ஊட்டி தொகுதியை பிஜேபி-க்கு கொடுத்தும், சிட்டிங் எம்.எல்.ஏ ராமுவுக்கு சீட் கொடுக்காததும் எங்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது."

நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களைக் களமிறக்க அக்கட்சியின் தலைமை‌ முடிவுசெய்து வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்தது. இந்தநிலையில், ஊட்டி தொகுதியை பாஜக-வுக்கு வழங்க கட்சித் தலைமை திடீரென முடிவு செய்தது.

 அதிமுக-வினர் கைகலப்பு
அதிமுக-வினர் கைகலப்பு

கூடலூர் தனித் தொகுதி என்பதால், குன்னூர் தொகுதியில் போட்டியிட சிட்டிங் எம்.எல்.ஏ ராமு அல்லது மாவட்டச் செயலாளர் வினோத் இருவரில் யாராவது ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்தக் கடுமையான போட்டியில் மாவட்டச் செயலாளர் வினோத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்கு சீட் வழங்கப்படாததால் குன்னூர் தொகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மாவட்டச் செயலாளர் வினோத், சென்னையிலிருந்து திரும்பிய கையோடு எம்.எல்.ஏ ராமுவின் வீட்டுக்கே சென்று சமாதானம் செய்தார்.

 அதிமுக-வினர் கைகலப்பு
அதிமுக-வினர் கைகலப்பு

இதைத் தொடர்ந்து கோத்தகிரி டானிங்டன் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக மூடிவைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலை முன்பு கழுத்தில் மாலையுடன் வேட்பாளர் வினோத் நின்றுகொண்டிருந்தார்.

தங்களை முன்னிலைப்படுத்துவதில் இரு கோஷ்டியினர் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டதில், எம்.எல்.ஏ ராமுவை மேடையில் ஏற விடாமல் வெலிங்டன் கன்டோன்மென்ட் முன்னாள் துணைத் தலைவரும்‌ அதிமுக நிர்வாகியுமான பாரதியார் தடுத்தார். இதில் ஆவேசமடைந்த எம்.எல்.ஏ ராமுவும் தள்ளினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாரதியார்
பாரதியார்

பொதுவெளியில் நடந்த இந்தத் தள்ளுமுள்ளு குறித்து நம்மிடம் பேசிய கட்சி நிர்வாகி ஒருவர், "ஊட்டி தொகுதியை பிஜேபி-க்குக் கொடுத்தும், சிட்டிங் எம்.எல்.ஏ ராமுவுக்கு சீட் கொடுக்காததும் எங்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கோஷ்டிக்கும் ஏற்கெனவே மோதல் இருந்துவந்தது. சீட் விவகாரத்தில் இது வெடித்தது. சீட் கிடைக்காத விரக்தியில் எம்.எல்.ஏ ராமு தன்னைத் தாக்கியதாக பாரதியார் குன்னூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். விவகாரம்‌ மேலும் விஸ்வரூபம் எடுக்கும்" எனப் புலம்பினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு