Election bannerElection banner
Published:Updated:

30-ம் தேதி மோடி, 1-ம் தேதி ராஜ்நாத் சிங் - தமிழகத்துக்கு படையெடுக்கும் பாஜக தலைவர்கள்

மோடி
மோடி

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி 30-ம் தேதி தாராபுரம் வரவிருக்கிறார். ஏப்ரல் 2-ம் தேதி மதுரை மற்றும் நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார் என சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில், குன்னூர், கூடலூர் தொகுதிகளில் அ.தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க ஊட்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இதன் மூலம் ஊட்டி தொகுதியில் பா.ஜ.க-வும் காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. காங்கிரஸின் கோட்டையான ஊட்டி தொகுதியை தட்டிப்பறிக்க பா.ஜ.க தீவிரம் காட்டிவருகிறது.

பா.ஜ.க பரப்புரை
பா.ஜ.க பரப்புரை

ஊட்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் போஜராஜனை ஆதரித்து பிரசாரம் செய்ய அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரும், தேசியச் செயலாளருமான சி.டி.ரவி ஹெலிகாப்டர் மூலம் இன்று ஊட்டிக்கு வந்தார். ஊட்டி அருகிலுள்ள பி.மணிஹட்டி என்ற கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, ஊட்டியிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் கட்சியினருடன் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, ``தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி 30-ம் தேதி தாராபுரம் வரவிருக்கிறார். ஏப்ரல் 2-ம் தேதி மதுரை மற்றும் நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். மதுரையில் 2-ம் தேதி நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ஹெலிகாப்டரில் வந்த சி.டி.ரவி
ஹெலிகாப்டரில் வந்த சி.டி.ரவி

இந்த மாதம் 26-ம் தேதி பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவும், 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் கடுமையாக தேர்தல் பணியாற்றிவருகின்றன. இதன் காரணமாக, அ.தி.மு.க கூட்டணி தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஊட்டி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள, ஏப்ரல் 1-ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊட்டிக்கு வரவிருக்கிறார்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு