Election bannerElection banner
Published:Updated:

சென்னை: முன் அனுமதியின்றி மசூதியில் பிரசாரம்! - பா.ஜ.க வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு பதிவு

குஷ்பு
குஷ்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் நடிகை குஷ்பு மற்றும் சிலர் முன்அனுமதியின்றி மசூதியில் ஓட்டுக் கேட்டதால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை குஷ்பு சுந்தர் போட்டியிடுகிறார். அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்குத் தொகுதி முழுவதும் கட்சியினர் தாமரைச் சின்னத்தில் வாக்குகளைச் சேகரித்துவருகின்றனர். வேட்பாளர் நடிகை குஷ்பு சுந்தரும் வீடு வீடாகச் சென்று குறைகளைக் கேட்டுவருகிறார். அதோடு, பொதுமக்களோடு சேர்ந்து டீக்கடையில் தேநீர் அருந்தியும் ஓட்டுகளைச் சேகரித்துவருகிறார். அதனால் வேட்பாளர் நடிகை குஷ்பு சுந்தருக்கும் தி.மு.க வேட்பாளர் எழிலுனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தநிலையில், 2.4.2021-ல் நடிகை குஷ்பி மற்றும் கூட்டணிக் கட்சியினர் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையிலுள்ள மசூதியில் விதிகளை மீறி வாக்குச் சேகரிப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிக்குத் தகவல் கிடைத்தது.

குஷ்பு
குஷ்பு

உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்னை குடிநீர் வாரிய உதவி இன்ஜினீயரும், தேல்தல் கூடுதல் பறக்கும் படை அதிகாரியான சுரேஷ்குமார் தலைமையிலான ஊழியர்களும் சென்றனர். அப்போது மசூதி முன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேட்பாளர் நடிகை குஷ்புவிடம் முன் அனுமதி இல்லாமல் எதற்காகத் துண்டுப்பிரசுரம் விநியோக்கிக்றீர்கள் என்று பறக்கும்படை ஊழியர்கள் கேள்வி கேட்டனர். ஆனால், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இது குஷ்பூ மேடம் தந்த நம்பிக்கை!

இதையடுத்து பறக்கும் படை அதிகாரியான உதவிப் பொறியாளர் சுரேஷ்குமார், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 143, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் நடிகை குஷ்பு மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்தார்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் கொடுத்த புகாரில், ``ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளர் குஷ்பு மற்றும் சிலர் முன் அனுமதியில்லாமல் ஆற்காடு சாலையிலுள்ள மசூதியில் துண்டுப்பிரசுரம் கொடுப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

அதனால் அங்கு சென்று பார்த்தபோது நடிகை குஷ்பு மற்றும் சிலர் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்தனர். இது தேர்தல் விதிப்படி முரண்பாடாகும். எனவே, தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகை குஷ்புவை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு