Published:Updated:

லாஸ்ட் பன்ச்

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

ஸ்டாலினுக்கு இன்று கிடைக்கும் மரியாதைக்குக் காரணம் அவர் பெயருக்கு முன்னிருக்கும் `மு.க’ என்னும் முதலெழுத்துதான்

லாஸ்ட் பன்ச்

ஸ்டாலினுக்கு இன்று கிடைக்கும் மரியாதைக்குக் காரணம் அவர் பெயருக்கு முன்னிருக்கும் `மு.க’ என்னும் முதலெழுத்துதான்

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

பிரசாரங்களெல்லாம் ஏப்ரல் 4-ம் தேதி மாலை 7 மணியுடன் ஓய்ந்துவிட... கடைசியாக அரசியல் தலைவர்கள் அவரவர் தொகுதியில் அனல் பறக்கப் பேசிய லாஸ்ட் பன்ச்களின் தொகுப்பு இது...

லாஸ்ட் பன்ச்

``ஸ்டாலினின் சொந்தத் தொகுதிக்கே அவர் ஒன்றும் செய்யவில்லை. எங்கள் ஆட்சியில்தான் அங்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தினோம். உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து உங்களைச் சந்திக்கிறேன். 2011-க்கு முன்பு எடப்பாடி தொகுதி எப்படி இருந்தது, 2021-ல் எப்படி இருக்கிறது என்பதை நீங்களே எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்!” - எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி.

லாஸ்ட் பன்ச்

“ஸ்டாலினுக்கு இன்று கிடைக்கும் மரியாதைக்குக் காரணம் அவர் பெயருக்கு முன்னிருக்கும் `மு.க’ என்னும் முதலெழுத்துதான். பெண்களுக்கு நிறைய நல்ல திட்டங்களை அறிவித்திருப்பது அ.தி.மு.க மட்டும்தான்!” - குஷ்பு, ஆயிரம் விளக்கு தொகுதி.

லாஸ்ட் பன்ச்

``கிராமங்களில் புளியமரம், மீன்பாசி ஏலம் நடைபெறுவதுபோல ஏலத்தின் மூலமாக முதல்வர் பதவிக்கு வந்தவர்தான் பழனிசாமி. ஆனால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 1970-லிருந்து தனது கடுமையான உழைப்பின் காரணமாக முதல்வர் வேட்பாளராக மாறியுள்ளார்!’’ - கே.எஸ்.அழகிரி, நாங்குநேரி.

லாஸ்ட் பன்ச்

``நாட்டைக் கொடுத்தீர்களானால் தலைசிறந்த நாடாக மாற்றிவிடுவேன்... இந்தத் தொகுதியைக் கொடுத்தீர்களானால் தமிழகத்தின் தலைசிறந்த தொகுதியாக மாற்றிவிடுவேன். நான் பிரச்னையைக் கேட்க வந்தவன் அல்ல; தீர்க்க வந்தவன். நான் வாக்கு கேட்கவில்லை; எதிர்காலத் தம்பி, தங்கைகளுக்கான வாழ்க்கையைக் கேட்கிறேன். நாம் தமிழருக்கு நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் இந்த மண்ணைக் காக்கும்; மரத்தைக் காக்கும்; மலையைக் காக்கும்; நீரைக் காக்கும்; நிலத்தைக் காக்கும்; மக்களின் நலத்தைக் காக்கும்!” - சீமான். திருவொற்றியூர்

லாஸ்ட் பன்ச்

``மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது. அ.தி.மு.க அனைத்துச் சமூகத்தினருக்கும் பாரபட்சமின்றி பாதுகாப்பு அளித்துக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில்தான் சாதிச் சண்டைகள் இல்லாமல் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சிறுபான்மை இனத்தவரையும் பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க அரசு இருந்துவருகிறது.’’ - ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர்.

லாஸ்ட் பன்ச்

“பணத்தை முதலாகப் போட்டவர்கள் பணத்தைத்தான் தேடுவார்கள். நேர்மையை முதலாகப் போட்டவர்கள் நேர்மையைத் தேடுவார்கள். ஏழைகள் பணத்தைக் காட்டினால் வந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர். ஏழைகள் பணமில்லாமல் இருக்கலாம். ஆனால், நேர்மை இல்லாமல் இருக்க மாட்டார்கள். நான் தியாகம் செய்ய வரவில்லை. மாற்றம் செய்ய வந்திருக்கிறேன்.” - கமல்ஹாசன், கோவை தெற்குத் தொகுதி, கெம்பட்டி காலனி.

லாஸ்ட் பன்ச்

``கலைஞர் மறையும்போது அவர் முதலமைச்சராக இல்லை என்பதுதான் நமக்கெல்லாம் இருக்கின்ற வருத்தம். `தி.மு.க மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது’ என்கிற லட்சியத்தை நிறைவேற்றிவிட்டேன் என்று தலைவர் கலைஞரிடம் காட்ட நினைத்தேன். ஆனால், முதுமை காரணமாக அவர் முந்திக்கொண்டார். அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் காட்டுவதற்கான நாள்தான் ஏப்ரல் 6!” - ஸ்டாலின், கொளத்தூர்.

லாஸ்ட் பன்ச்

“முதன்முறையாகப் போட்டியிடுகிறேன். நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான், இங்கே வெறும் எட்டு நாட்கள் மட்டும் வந்து மற்ற நாட்களெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றினேன். ‘நாங்க பார்த்துக்கறோம்... நீங்கள் அங்கு செல்லுங்கள்’ என்று என்னை அனுமதித்த நீங்கள்தான் தமிழகம் முழுவதும் தி.மு.க வெல்வதற்குக் காரணமாக இருக்கப்போகிறீர்கள்!” - உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி.

லாஸ்ட் பன்ச்

``ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்படும். கோவில்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. தீய சக்தியான தி.மு.க-வை ஆட்சிக் கட்டிலில் அமரவிடாமல் நீங்கள் தடுக்க வேண்டும்.” - டி.டி.வி.தினகரன், கோவில்பட்டி.