Published:Updated:

புதுச்சேரியில் கரன்சி வெள்ளம்!

புதுச்சேரியில் கரன்சி வெள்ளம்!
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரியில் கரன்சி வெள்ளம்!

கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்... கடுகடுத்த உயர் நீதிமன்றம்

புதுச்சேரியில் கரன்சி வெள்ளம்!

கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்... கடுகடுத்த உயர் நீதிமன்றம்

Published:Updated:
புதுச்சேரியில் கரன்சி வெள்ளம்!
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரியில் கரன்சி வெள்ளம்!

புதுச்சேரியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கரன்சி வெள்ளத்தை பாயவிட்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். குறிப்பாக, பா.ஜ.க தனது அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி, அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்றிவிடத் துடிக்கிறது. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பூ விற்பவர்களையும், புண்ணாக்கு வியாபாரிகளையும் வளைத்துப் பிடித்துக்கொண்டிருந்த தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளாகியிருக்கிறது!

புதுச்சேரியில் கரன்சி வெள்ளம்!
புதுச்சேரியில் கரன்சி வெள்ளம்!

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸும், ஒன்பது தொகுதிகளில் பா.ஜ.க-வும், ஐந்து தொகுதிகளில் அ.தி.மு.க-வும் போட்டியிடுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் 15 தொகுதிகளில் காங்கிரஸும், 13 தொகுதிகளில் தி.மு.க-வும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

தொகுதிக்கு ஐந்து கோடி ரூபாய் டார்கெட் நிர்ணயம் செய்து, ஒன்பது தொகுதிகளிலும் முதலில் விளையாட ஆரம்பித்தது பா.ஜ.க-தான். கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர்கள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐவர் குழு, தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தெருவாரியாக வாக்காளர்களைக் கணக்கெடுத்து ஒரு குடும்ப அட்டைக்கு 1,000 ரூபாய், இரண்டாவது சுற்றில் வாக்கு ஒன்றுக்கு 1,500 ரூபாய் என்று விநியோகித்தது. இதற்கெல்லாம் ஒத்துழைப்பு கொடுக்க துணை ராணுவப்படையை பக்கத்தில் வைத்துக்கொண்டது போதாதென்று, கர்நாடகாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஐந்து கம்பெனி ஊர்க்காவல் படையையும் வளைத்தது பா.ஜ.க தரப்பு. அக்கட்சியின் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடும் காமராஜ் நகர் தொகுதியிலும், அவரின் மகன் விவிலியன் ரிச்சர்ட் போட்டியிடும் நெல்லித்தோப்பு தொகுதியிலும் வாக்குக்கு இரண்டாயிரமும், ஆயிரம் ரூபாய்க்குப் பரிசுப் பொருளுக்கான டோக்கனும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

புதுச்சேரியில் கரன்சி வெள்ளம்!
புதுச்சேரியில் கரன்சி வெள்ளம்!

காங்கிரஸ் மற்றும் தி.மு.க தரப்புகளும் ஏரியாக்களுக்குத் தக்கபடி வாக்கொன்றுக்கு 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை பட்டுவாடாவை இரண்டு சுற்றுகளாக முடித்துவிட்டன. இதில் அதிகபட்சமாக உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க தரப்பில் குடும்ப அட்டைக்கு 3,000 ரூபாயும், வாக்கொன்றுக்கு 1,000 ரூபாயும் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க தரப்பில் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் சராசரியாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது.

இந்த நீரோட்டத்தில் நாம் கலந்து கொள்ளவில்லையென்றால் கரைசேருவது கடினம் என்று என்று நினைத்தார்களோ என்னவோ, தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்துப் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சராசரியாக 500 ரூபாய் வழங்கியிருக்கிறது. வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கமே இல்லாத ஏனாம் தொகுதியில், சுயேச்சை வேட்பாளரான கொல்லப்பள்ளி அசோக் வாக்கொன்றுக்கு 2,000 ரூபாயை அள்ளித் தெளித்திருக்கிறார். ‘படுத்துக்கொண்டே ஜெயிக்கலாம்’ என்று முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் வாக்குறுதியை நம்பி ஏனாம் தொகுதியில் களமிறங்கிய முன்னாள் முதல்வர் ரங்கசாமி, இந்த திடீர் திருப்பத்தால் அரண்டுபோய் வேறு வழியில்லாமல் வாக்கொன்றுக்கு 2,000 ரூபாயை அவிழ்த்திருக்கிறார்.

ரங்கசாமி -  ஜான்குமார் - அசோக்  -  பூர்வா கார்க்
ரங்கசாமி - ஜான்குமார் - அசோக் - பூர்வா கார்க்

இவர்களுக்கு நிகராக பல சுயேச்சைகளும் தேர்தல் களத்தைத் தெறிக்கவிடுகின்றனர். உருளையன்பேட்டையில் சுயேச்சையாகப் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ நேரு தரப்பில் வாக்கொன்றுக்கு 1,000 ரூபாயும், ரெட்டியார்பாளையத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் வணிகர் சங்கத் தலைவர் சிவசங்கரன் தரப்பில் வாக்கொன்றுக்கு 1,500 ரூபாயும், 500 ரூபாய் மதிப்புள்ள டர்க்கி டவலும், 300 ரூபாய் மதிப்புள்ள எவர்சில்வர் அண்டா ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றன.

அனைத்துத் தரப்பிலும் பட்டுவாடா கனகச்சிதமாக முடிந்ததும், தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான ஏப்ரல் 4-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங், “வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதைத் தடுப்பதற்காக இரவில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என்று மின்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறோம்’’ என்று சொன்னதைக் கேட்டு செய்தியாளர்கள் சிரித்துவிட்டனர்.

இது ஒருபுறமிருக்க, தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பூர்வா கார்க். அதையடுத்து, ‘‘எந்தவிதக் காரணமும் இல்லாமல் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் ஆட்சியர். மாவட்ட ஆட்சியராக இருந்துகொண்டே மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க-வின் ‘ட்வீட்’களை அவர்களுக்கு ஆதரவாகப் பலமுறை ‘ரீட்வீட்’ செய்தவர் என்பதால், இந்த உத்தரவு உள்நோக்கம் கொண்டது” என்று சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ராஜாங்கம். அந்த வழக்கில் ஆஜரான புதுச்சேரி அரசு வழக்கறிஞர் மாலா, ‘‘144 தடை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இருக்கிறது’’ என்று வாதாடினார். அதற்கு, ‘‘அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அனைவ ருக்கும் நாங்கள் மரண தண்டனை வழங்குகிறோமா? நீங்கள் தேர்தல் ஆணையம்தானே தவிர, அரசியல் கட்சி கிடையாது’’ என்று கடுகடுத்த நீதிபதிகள், ‘‘144 தடை உத்தரவுக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தவில்லையென்றால் நீதிமன்றமே அதை ரத்துசெய்யும்’’ என்று கூறினார்கள்.

புதுச்சேரியில் கரன்சி வெள்ளம்!

எல்லா கூத்துகளையும் தாண்டி நடந்து முடிந்திருக்கிறது புதுச்சேரி தேர்தல்!