Published:Updated:

`பழங்குடிகளுக்காகத் தொடர்ந்து செயலாற்றுவேன்!’ - அதிமுக வேட்பாளராகக் களமிறங்கிய சமூகச் செயற்பாட்டாளர்

சுகந்தி வினோதினி

‘‘பெண்களின் முன்னேற்றத்துக்காக சுயத்தொழில் பயிற்சிகளைக் கொடுப்பேன். பழங்குடிகளுக்காகத் தொடர்ந்து களத்தில் செயலாற்றுவேன்’’ என்கிறார் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய சமூகச் செயற்பாட்டாளர் சுகந்தி வினோதினி.

`பழங்குடிகளுக்காகத் தொடர்ந்து செயலாற்றுவேன்!’ - அதிமுக வேட்பாளராகக் களமிறங்கிய சமூகச் செயற்பாட்டாளர்

‘‘பெண்களின் முன்னேற்றத்துக்காக சுயத்தொழில் பயிற்சிகளைக் கொடுப்பேன். பழங்குடிகளுக்காகத் தொடர்ந்து களத்தில் செயலாற்றுவேன்’’ என்கிறார் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய சமூகச் செயற்பாட்டாளர் சுகந்தி வினோதினி.

Published:Updated:
சுகந்தி வினோதினி

ரக்கோணம் பகுதியிலுள்ள பழங்குடி இருளர் குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து, கல்வி பயில வைக்கும் பெண்ணியச் செயற்பாட்டாளர் சுகந்தி வினோதினி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார். இதுவரை அரசியல் சாயமில்லாமல் சமூகத் தொண்டாற்றிவந்த சுகந்தி வினோதினி, அ.தி.மு.க வேட்பாளராகக் களம் காண்பதால், கவனம் பெற்றிருக்கிறார். அரக்கோணம் நகராட்சியிலிருக்கும் சுவால்பேட்டையை உள்ளடக்கிய 22-வது வார்டில், அவர் போட்டியிடுகிறார். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவந்த சுகந்தி வினோதினி, ஒடுக்கப்பட்ட சமூக குழந்தைகளின் கல்விக்காகவே தனது பணியை ராஜினாமா செய்தவர்.

பழங்குடியின குழந்தைகளுடன் சுகந்தி வினோதினி
பழங்குடியின குழந்தைகளுடன் சுகந்தி வினோதினி

அரக்கோணத்தைச் சுற்றியுள்ள கன்னிவேடு, வேலூர்பேட்டை, கும்பினிப்பேட்டை, சித்தூர், மிட்டபேட்டை போன்ற பழங்குடி இருளர் குடியிருப்புகளில் இருக்கும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தது மட்டுமன்றி, அவர்களுக்குத் தேவையான சீருடை, காலனி, நோட்டுப் புத்தகம் போன்றவற்றையும் வாங்கித் தருகிறார். பள்ளி வெகு தூரத்தில் இருப்பதால், மாணவர்கள் சென்று வர சைக்கிள்களையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பெண்பிள்ளைகள் சென்று வருவதற்கு ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். `கல்வி ஒன்றே சமூகத்தின் மாற்றம்’ என்று முழக்கமிடும் சுகந்தி வினோதினியின் பின்னால், புத்தகப் பையுடன் அணி திரண்டு நிற்கிறார்கள் ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பழங்குடி சமூகக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க சாதிச் சான்றிதழ் கட்டாயம் என்பதால், அதை பெற்றுத்தருவதற்கான உரிமைப் போராட்டத்தையும் தீவிரமாக முன்னெடுத்துவருபவர் சுகந்தி வினோதினி.

சுகந்தி வினோதியின் தீவிர முயற்சியால், ஜனவரி 20 அன்று, கும்பினிப்பேட்டை பழங்குடி குடியிருப்புப் பகுதிக்குவந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், ஒவ்வொரு வீடாகச் சென்று அந்த மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர், 45 பழங்குடி குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழை வழங்கினார். அதோடு, இவ்வளவுக்கும் காரணமான சுகந்தி வினோதியை வெகுவாகப் பாராட்டியும் பேசியிருந்தார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்.

சுகந்தி வினோதினி
சுகந்தி வினோதினி

இந்த நிலையில், மக்கள் பணியாற்றுவதற்காக அவர் தேர்தல் அரசியலுக்குள் வந்திருப்பதையும் பலத்தரப்பினர் பாராட்டி வருகிறார்கள்.

அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கியதற்கான காரணம் குறித்து சுகந்தி வினோதியிடம் கேட்டபோது, ``அரக்கோணம் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான ரவி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுவும் ஒருக் காரணம்... என்றாலும் மக்கள் பிரதிநிதியாக நானே இருந்தால், தேவையான உதவிகளை செய்ய முடியும். மக்கள் என்னை ஏற்பார்கள் என்று நம்புகிறேன். நான் வெற்றிப்பெற்றால், என்னுடைய வார்டில் உள்ள பெண்களின் முன்னேற்றத்துக்காக சுயத்தொழில் பயிற்சிகளைக் கொடுப்பேன். பழங்குடிகளுக்காகத் தொடர்ந்து களத்தில் செயலாற்றுவேன்’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism