Published:Updated:

தஞ்சாவூர் மாநகராட்சி: திமுக-வில் சீட் கிடைக்காத அதிருப்தி! -தேர்தலில் சுயேச்சையாக கணவன், மனைவி, மகன்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மனுத்தாக்கல் ( ம.அரவிந்த் )

``மறைந்த முதல்வர் கருணாநிதி தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றபோது, எங்க வார்டில்தான் அதிக வாக்குகள் பெற்றார். இதற்காக அப்பாவைப் பாராட்டி, கருணாநிதி மோதிரம் அணிவித்தார். எனக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை.”

தஞ்சாவூர் மாநகராட்சி: திமுக-வில் சீட் கிடைக்காத அதிருப்தி! -தேர்தலில் சுயேச்சையாக கணவன், மனைவி, மகன்

``மறைந்த முதல்வர் கருணாநிதி தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றபோது, எங்க வார்டில்தான் அதிக வாக்குகள் பெற்றார். இதற்காக அப்பாவைப் பாராட்டி, கருணாநிதி மோதிரம் அணிவித்தார். எனக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை.”

Published:Updated:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மனுத்தாக்கல் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட திமுக-வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் அடுத்தடுத்து உள்ள மூன்று வார்டுகளிலும் கணவன், மனைவி, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம் திமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்
தஞ்சாவூர் மாநகராட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் போட்டியிட சீட் கிடைத்த வேட்பாளர்கள் தாரை, தப்பட்டை முழங்க ஆதரவாளர்கள் திரள வலம்வந்து வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். திமுக-வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான செல்வகுமார் என்பவர் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த நிலையில் அவருக்குக் கட்சியில் சீட் கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் ஏற்பட்ட அதிருப்தியில், அவர் வார்டு 32, 33, 34 என மூன்று வார்டுகளிலும் தான், தன் மனைவி, மகன் என மூன்று பேரும் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் திமுக-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், திமுக தலைமையின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்லவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாங்கள் அடுத்தடுத்து உள்ள வார்டுகளில் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர்

இது குறித்து செல்வக்குமாரிடம் பேசினோம். ``நான் தஞ்சை வண்டிக்காரத் தெருவில் வசித்துவருகிறேன். இதற்கு முன்பு 44-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக இருந்திருக்கிறேன். தற்போது 44-வது வார்டு வரையறை சீரமைப்பில் 32, 33, 34 ஆகிய வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நான் இதில் ஏதாவது ஒரு வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனுத்தாக்கல் செய்திருந்தேன். கட்சியில் பொறுப்பில் இல்லையென்றாலும், சீனியர் என்கிற முறையில் வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், எனக்குக் கட்சியில் சீட் கொடுக்கவில்லை. என்னோட தந்தை சீனிவாசன் எட்டு முறை கவுன்சிலராக இருந்தவர். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றபோது எங்கள் வார்டில்தான் அதிக வாக்குகள் பெற்றார். இதற்காக அப்பாவைப் பாராட்டி கருணாநிதி மோதிரம் அணிவித்தார். கட்சியில் சீனியர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அப்பாவைத் தொடர்ந்து நானும் கட்சியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டுவருகிறேன்.

தஞ்சாவூர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த குடும்பம்
தஞ்சாவூர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த குடும்பம்

எங்களைப் போன்ற கட்சியில் உழைத்தவர்களுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. புதிதாக வந்தவர்களுக்கே சீட் கொடுத்துள்ளனர். மேலும் பழைய ஆட்கள் ஒதுக்கப்படுகிறார்கள். வேட்பாளர் தேர்வில் இருந்த நிர்வாகிகள் ஏன் இப்படி நடந்துகொண்டனர் என்பது தெரியவில்லை. எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம் தனக்கு வேண்டியவர்களுக்கும், கட்சிக்குப் புதிதாகப் வந்தவர்களுக்கும் சீட் கொடுத்திருக்கிறார். இதனால் எனக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டது. தஞ்சாவூர்ல நடப்பதை தலைமையில் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என கருதினேன். என்னுடைய எதிர்ப்பையும் பதிவுசெய்ய நினைத்தேன்.

எனவே, சுயேச்சையாக நான் மட்டுமல்ல... மனைவி, மகன் ஆகியோரையும் போட்டியிடவைக்க முடிவுசெய்தேன். இதைத் தொடர்ந்து நான் 32-வது வார்டு, என் மனைவி வனிதா 33, என் மகன் சக்கரவர்தி 34 என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் போட்டியிட மனுத் தாக்கல் செய்ததைப் பற்றிப் பலரும் பேசிவருகின்றனர். ஆனால், திமுக நிர்வாகிகள் யாரும் இதுவரை என்ன ஏதுன்னுகூட கேட்கவில்லை. தலைமை இதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்பதே என்னோட எண்ணம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism