Published:Updated:

`860 கிராம ஊராட்சிகள்; 3,520 வாக்குச்சாவடி மையங்கள்!' உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் தி.மலை

ஊராட்சித் தேர்தல் பணிகளில் 40 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1,105 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம்
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 860 கிராம ஊராட்சிப் பகுதிகளில், 3,520 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 27.12.2019 மற்றும் 30.12.2019 தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தீவரப்படுத்திப்பட்டு வருகிறது.

`அவரால் நமக்கு நன்மை கிடைக்கும்!’- ஊராட்சி மன்றத் தலைவர் ஏலத்தை எதிர்த்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 மாவட்ட ஊராட்சி வார்டுஉறுப்பினர்பதவியிடங்களுக்கும், 341ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 860 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும் மற்றும் 6,207 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று வாக்குப் பதிவு காலை 07.00 மணிக்குத் துவங்கி மாலை 05.00 மணியுடன் முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை 02.01.2020 அன்று காலை 08.00 மணிக்கு 18 மையங்களில் நடைபெறவுள்ளது.

27.12.2019 அன்று முதல் கட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 181 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 498 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் மற்றும் 3,480 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் மொத்த வாக்குச்சாவடி மையங்கள்
ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் மொத்த வாக்குச்சாவடி மையங்கள்

30.12.2019 அன்று இரண்டாம் கட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 160 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 362 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் மற்றும் 2,727 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும் கிராம ஊராட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்குப் பச்சை நிறத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும் மற்றொரு வார்டிற்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்
வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்

இந்தத் தேர்தலில் 8,05,233 ஆண் வாக்காளர்களும், 8,21,899 பெண் வாக்காளர்களும், 78 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 16,27,210 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதற்கட்டத்தில் 4,27,379 ஆண் வாக்காளர்களும், 4,37,826 பெண் வாக்காளர்களும், 54 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 8,65,259 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்டத்தில் 3,77,854 ஆண் வாக்காளர்களும், 3,84,073 பெண் வாக்காளர்களும், 24 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 7,61,951 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஊராட்சித் தேர்தல் பணிகளில் 40 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1,105 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக ஒரு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச் சாவடிகளுக்கு 7 அலுவலர்கள் வீதமும், இரண்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச் சாவடிகளுக்கு 8 அலுவலர்கள் வீதமும் சுமார் 29,387 அலுவலர்கள் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க கூட்டணி கட்சிகளும், தி.மு.ககூட்டணிக்கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள் தீவரமாக மனுத்தாக்கல் செய்து வருகிறனர்.