Published:Updated:

``பெரிய கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்தது மக்கள் தந்த பரிசு!" - சுயேச்சையாக வென்ற சினேகா

சினேகா ( DIXITH )

``கல்லூரி மாணவியான என்னாலேயே இப்படி ஒரு வெற்றியைப் பெற முடியும்னா, இனி நமக்கும் அரசியலுக்கும், வெற்றிக்கும் வெகுதூரம் இல்லைனு சக பெண்கள் உணர வேண்டிய காலம் வந்துடுச்சு. நம்பிக்கை வெச்சு வாங்க... நம்மை நிரூபிச்சுக் காட்டுவோம்." - சினேகா

``பெரிய கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்தது மக்கள் தந்த பரிசு!" - சுயேச்சையாக வென்ற சினேகா

``கல்லூரி மாணவியான என்னாலேயே இப்படி ஒரு வெற்றியைப் பெற முடியும்னா, இனி நமக்கும் அரசியலுக்கும், வெற்றிக்கும் வெகுதூரம் இல்லைனு சக பெண்கள் உணர வேண்டிய காலம் வந்துடுச்சு. நம்பிக்கை வெச்சு வாங்க... நம்மை நிரூபிச்சுக் காட்டுவோம்." - சினேகா

Published:Updated:
சினேகா ( DIXITH )

இந்தியக் குடியரசில் நடைபெறும் தேர்தல்களில் மிக முக்கியமானது உள்ளாட்சித் தேர்தல். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவுடன் ஆரம்பித்து, பிப்ரவரி 22 தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. பெண்களுக்கு 50% ஒதுக்கீட்டுடனும், அது குறித்த பெரும் எதிர்பார்ப்புடனும் நடந்து முடிந்திருக்கும் இந்தத் தேர்தலில், பல பெண்களின் வெற்றி ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளின் தேர்தல் அரசியல் ஆர்வமும் வெற்றியும் இன்னும் பல பெண்களை அரசியல் பக்கம் திருப்பியுள்ளது என்றே கூறலாம்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த வகையில், பலரின் பார்வையை ஆச்சர்யப் பார்வையாக்கிய ஒரு வெற்றி, திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் நிகழ்ந்துள்ளது. பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவி சினேகா சுயேச்சையாகப் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க, அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் என முக்கிய கட்சியின் வேட்பாளர்கள், இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் என்று அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்து தன்னுடைய வெற்றியை மாநிலமே திரும்பிப் பார்க்கும் வகையில் பெரிதாகப் பதிவு செய்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தான் வாழும் பகுதிக்கு தன்னால் முடிந்த நன்மை செய்ய எண்ணி தன்னுடைய கல்லூரிப் பருவத்திலேயே அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் சினேகாவை சந்தித்துப் பேசினோம்.

``என் அப்பாதான் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் அரசியல் சார்ந்து எந்தப் பதவியும் வகிக்கலை என்றாலும், மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வந்தார். சின்ன வயசுல இருந்தே அவர் செய்யும் சேவைகளைப் பார்த்தே வளர்ந்த எனக்கு, மக்கள் நலன் சார்ந்து இயங்க ஒரு பதவி இருந்தா இன்னும் அதிகமா மக்களுக்கு நன்மைகளைச் செய்திடலாமேனு தோன்றவே, தேர்தல்ல சுயேச்சையா நிற்க முடிவெடுத்தேன்.

சினேகா
சினேகா
DIXITH

மக்கள் ஆதரவு எனக்கு நிறைய இருந்ததை பிரசாரம் மேற்கொண்டப்போ உணர முடிந்தது. இந்த மக்கள் என்னை நிச்சயமா வெற்றியடைய வைப்பாங்கனு அப்போவே நம்பிக்கை கிடைச்சிடுச்சு. ஆனா, என்னை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய கட்சிகளைச் சேர்த்த வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைத்து, இப்படி ஒரு மாபெரும் வெற்றியை மக்கள் எனக்குத் தருவாங்கனு நினைக்கவே இல்லை'' என்று நெகிழ்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நான் போட்டியிட்டது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள துவாக்குடி நகராட்சியில் உள்ள 5-வது வார்டு. இந்த வார்டுல பதிவான 1,057 வாக்குகள்ல 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கேன். இதில் அ.ம.மு.க-வை தவிர, மற்ற பெரிய கட்சியின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள்னு என்னை எதிர்த்து நின்ற ஏழு வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருக்காங்க. இது மக்கள் என்மேல வெச்சிருக்கும் நம்பிக்கையைக் காட்டுது. எங்க பகுதியில உள்ள பல பிரச்னைகளை, குறிப்பாக பட்டா இல்லாம இருக்குறவங்களுக்கு பட்டா பெற்றுத் தருவது, நூலகம், அங்கன்வாடி, கழிவறை போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதுனு இதையெல்லாம் முக்கிய நோக்கமா கொண்டிருக்கேன்'' என்பவர், குடும்பத்தின் ஆதரவு, நண்பர்கள், கல்லூரியைச் சேர்ந்தவார்கள் என தன் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறார்.

சினேகா
சினேகா
DIXITH

``மக்கள் சேவை செய்யணும் என்ற என் லட்சியத்துக்கு இப்போ பெரிய வாய்ப்பை மக்கள் கொடுத்திருக்காங்க. என் கல்வி, அரசியல் அதிகாரம்னு ரெண்டையும் அதுக்காக முழுமையா பயன்படுத்துவேன். கல்லூரி மாணவியான என்னாலேயே இப்படி ஒரு வெற்றியைப் பெற முடியும்னா, இனி நமக்கும், அரசியலுக்கும், வெற்றிக்கும் வெகுதூரம் இல்லைனு சக பெண்கள் உணர வேண்டிய காலம் வந்துடுச்சு. நம்பிக்கை வெச்சு வாங்க... நம்மை நிரூபிச்சுக் காட்டுவோம்'' - சக பெண்களுக்கும் அரசியல் பங்கேற்பு அழைப்பு விடுக்கிறார் சினேகா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism