Published:Updated:

மழை... நிதி... நிவாரணம்... அச்சம்... - தள்ளிப்போகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

குடும்பத் தலைவிகளுக்கு வழங்குவதாக அறிவித்த உரிமைத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை’ எனத் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்னை செய்ய வாய்ப்புள்ளது.

மழை... நிதி... நிவாரணம்... அச்சம்... - தள்ளிப்போகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

குடும்பத் தலைவிகளுக்கு வழங்குவதாக அறிவித்த உரிமைத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை’ எனத் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்னை செய்ய வாய்ப்புள்ளது.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

‘‘உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் தமிழக அரசு அற்பத்தனமான காரணங்களைக் கூறுவதை ஏற்க முடியாது. இன்னும் நான்கு மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’’ என்று செப்டம்பர் மாதம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவின் அடிப்படையில், ஜனவரி 10-ம் தேதிக்கு முன்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தமிழக அரசு நடத்த வேண்டும். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் முடிந்ததுமே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ள ஆரம்பித்தது. ஆனால், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்க முடிவெடுத்திருப்பதாகத் தலைமைச் செயலகத்திலிருந்து செய்திகள் கசிகின்றன!

“ஏன் இந்தத் திடீர் முடிவு?” என்று கோட்டை வட்டாரத்து அதிகாரிகளிடம் கேட்டோம். ‘‘ஏற்கெனவே தமிழக அரசு, டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை முடித்துவிடும் திட்டத்தில் இருந்தது. மாநில தேர்தல் ஆணையத்திடமும் இதுபற்றி கலந்தாலோசிக்கப் பட்டு, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வார்டு மறுவரையறைப் பணிகள் முழுவீச்சில் நடந்தன. ஆனால், நவம்பர் முதல் வாரத்திலிருந்து தமிழகத்தில் பெய்யும் பரவலான கனமழை, இந்தப் பணிகளை முடக்கியிருக்கிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் உருவான வெள்ளப்பெருக்கும், தேங்கிக்கிடக்கும் மழைநீரும் ஆளும் தரப்புக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களைக் களத்தில் இறக்கி, வெள்ள மீட்புப்பணிகளைச் செய்தும்கூட பல இடங்களில் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

மழை... நிதி... நிவாரணம்... அச்சம்... - தள்ளிப்போகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

இந்த நிலையில்தான், நவம்பர் 20-ம் தேதி முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் சிலரே, ‘தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அமைச்சர்களெல்லாம் மழை நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டிவருகிறோம். இப்போது தேர்தலை வைத்தால் நம்மால் முழு வெற்றியைப் பெற முடியாது’ என்கிறரீதியில் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, அதிகாரிகளிடமும் ஆலோசனை செய்தார் முதல்வர். அப்போது, ` ‘குடும்பத் தலைவிகளுக்கு வழங்குவதாக அறிவித்த உரிமைத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை’ எனத் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்னை செய்ய வாய்ப்புள்ளது. மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாகச் சரிசெய்யாமல், நாம் மக்களைச் சந்திப்பது நல்லதல்ல’ என்று அதிகாரிகளும் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகே பொங்கலுக்குப் பிறகு தேர்தலை வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார் முதல்வர்’’ என்று சொன்னார்கள்.

நீதிமன்றமே காலக்கெடு விதித்தாலும், வெற்றி தோல்விக்காகப் போடப்படுகிற அரசியல் கணக்குகளே தேர்தல் தேதிகளை முடிவுசெய்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism