Published:Updated:

உள்ளாட்சி உய்யலாலா!

ரேகா பிரியதர்ஷினி -  உமாராணி
பிரீமியம் ஸ்டோரி
ரேகா பிரியதர்ஷினி - உமாராணி

கடந்த 30 ஆண்டுகளாக, திருப்பூர் மாநகர தி.மு.க-வைக் கையில் வைத்துக்கொண்டு பவர்ஃபுல்லாக வலம்வருபவர் செல்வராஜ்.

உள்ளாட்சி உய்யலாலா!

கடந்த 30 ஆண்டுகளாக, திருப்பூர் மாநகர தி.மு.க-வைக் கையில் வைத்துக்கொண்டு பவர்ஃபுல்லாக வலம்வருபவர் செல்வராஜ்.

Published:Updated:
ரேகா பிரியதர்ஷினி -  உமாராணி
பிரீமியம் ஸ்டோரி
ரேகா பிரியதர்ஷினி - உமாராணி

மேயர் கனவில் வலம்வரும் சேலம் பெண்மணிகள்!

சேலம் மாநகராட்சி மேயர் பதவி, பொது ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், தி.மு.க தரப்பில் 2006 - 11 மேயராக இருந்த ரேகா பிரியதர்ஷினி, ‘தலைமையில் தனக்குச் செல்வாக்கு இருக்கிறது’ என்று மேயர் சீட் வாங்கக் கடுமையாக முயன்றுவருகிறார். அதேபோல, 2014 சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு, தோல்வியடைந்த உமாராணியும் முயன்றுவருகிறார். இவர், மாநில உதயநிதி நற்பணி மன்றச் செயலாளராக இருக்கும் தன் மருமகன் ராஜா மூலமாக, சித்தரஞ்சன் சாலையிலுள்ள தலைவர் வீடு வரை இறங்கி மேயர் சீட்டுக்காகத் துண்டுபோட்டுவருகிறார். ‘பொதுத் தொகுதியாக இருந்தாலும் திறமையான, தகுதியான ஒரு பெண்ணைத் தலைவர் மேயர் ஆக்குவார்’ என்று இருவரும் ஒரே மாதிரி உற்சாகப் பல்லவி பாடுகிறார்களாம்!

உள்ளாட்சி உய்யலாலா!
செல்லூர் ராஜூ - ராஜன் செல்லப்பா
செல்லூர் ராஜூ - ராஜன் செல்லப்பா

மதுரை அ.தி.மு.க-வுக்குள் பூகம்பம்!

மதுரை மாநகராட்சியின் அ.தி.மு.க மேயர் வேட்பாளராக செல்லூர் ராஜூவின் மகள், ராஜன் செல்லப்பாவின் மருமகள் ஆகியோர் அறிவிக்கப்படுவார்கள் என்று கட்சியினர் பதற்றத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில், தலைமைக் கழகம் அறிவித்த பட்டியலில் இருவர் பெயரும் இல்லாதது கட்சியினரை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. ‘எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவி பெற நாங்கள் நினைக்கவே இல்லை’ என்று செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா தரப்பில் தற்போது சொல்லப்படுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் 80 சதவிகிதம் செல்லூராரின் ஆதரவாளர்கள் என்பதால், வாய்ப்பு கிடைக்காத முன்னாள் கவுன்சிலர்கள், சீனியர் கட்சிக்காரர்கள் உள்ளடி வேலை பார்க்கத் தயாராகிவருவதால், மதுரை மாநகர அ.தி.மு.க-வுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது!

செல்வராஜ் - சாமிநாதன்
செல்வராஜ் - சாமிநாதன்

திருப்பூர் தி.மு.க-வுக்குள் திகுதிகு!

கடந்த 30 ஆண்டுகளாக, திருப்பூர் மாநகர தி.மு.க-வைக் கையில் வைத்துக்கொண்டு பவர்ஃபுல்லாக வலம்வருபவர் செல்வராஜ். இரண்டு முறை திருப்பூர் நகராட்சித் தலைவராகவும், திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயராகவும் இருந்த இவர், தற்போது திருப்பூர் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், திருப்பூர் மத்திய மாவட்டப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கேயத்தில் வென்ற சாமிநாதனும், தாராபுரத்தில் வென்ற கயல்விழி செல்வராஜும் அமைச்சராகிவிட, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததில் செல்வராஜ் செம அப்செட்டில் இருந்துவருகிறார். இவருக்கும், அமைச்சர் சாமிநாதனுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏழாம் பொருத்தம்தான். இந்நிலையில், ‘என்னதான் சாமிநாதன் திருப்பூர் மாவட்ட அமைச்சராக இருந்தாலும், திருப்பூர் மாநகர் என் கன்ட்ரோல்லதான் இருக்கு. தலைமையில பேசி என் ஆள் ஒருத்தரை மேயராக்கி, சாமிநாதனுக்கு செக் வைக்கிறேனா இல்லையா பாருங்க’ என்று நெருங்கியவர்களிடம் சொல்லிவருகிறாராம் செல்வராஜ். ‘எனக்கு வேண்டப்பட்ட ஆள் ஒருத்தரை மேயராக்கி, செல்வராஜ் சகாப்தத்தை இத்தோட முடிக்கிறேன் பாருங்க’ என அமைச்சர் சாமிநாதனும் கோதாவில் இறங்கியிருக்கிறாராம். தேர்தலுக்கு முன்பே திருப்பூர் தி.மு.க-வில் தீயாகப் பற்றியெறிய ஆரம்பித்திருக்கிறது கோஷ்டிப்பூசல்!

சூர்யா பாலமுருகன் - ரேணுப்ரியா
சூர்யா பாலமுருகன் - ரேணுப்ரியா

‘‘வெற்றிபெற்றாலும் சிக்கல்தான்!’’ -தேனி தி.மு.க உள்குத்து

தேனி நகராட்சி சேர்மன் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பதவியை எதிர்பார்த்து வேலைகள் செய்துவந்த தேனி நகர தி.மு.க பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் கடுமையாக அப்செட்டானார். அவரின் மனைவி ரேணுப்ரியா, வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பதால், அவர் போட்டிக்கு வர மாட்டார் என எண்ணி, தேனி நகரத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை அணுகினார்கள். இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வனின் தீவிர ஆதரவாளரான சூர்யா பாலமுருகன், ‘‘நகராட்சி சேர்மன் ஆக வேண்டும் என்ற திட்டத்தில் பல லட்சங்களைச் செலவழித்திருக்கிறேன். அதனால், என் மனைவியை ராஜினாமா செய்யவைக்கிறேன். அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அனைத்துச் செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று தங்க தமிழ்ச்செல்வனிடம் உறுதியளித்துள்ளாராம். சொன்னதுபோலவே, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரேணுப்ரியா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த தி.மு.க-வினர், ‘‘ரேணுப்ரியா, தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றி முறையாக ராஜினாமா செய்யவில்லை. வெற்றிபெற்றாலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்று இப்போதே வில்லங்கத்தைக் கிளப்பத் தயாராகிவருகிறார்கள்!

முபாரக் - ராமச்சந்திரன்
முபாரக் - ராமச்சந்திரன்

‘‘வேட்பாளரை மாற்றுவோம்!’’ - முபாரக் பேச்சால் உஷ்ணத்தில் ஊட்டி தி.மு.க

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஆளுங்கட்சியினர் பலரும் மனைவி, மகள், மருமகள் எனத் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையே பெரும்பாலும் களமிறக்கியுள்ளனர். இந்நிலையில், ‘அ.தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியல் வெளியானதும், அந்த வேட்பாளருக்கு ஈடு கொடுக்கக்கூடிய நபரை மாற்றி நிறுத்துவோம்’ என்று கட்சியினர் மத்தியில் மாவட்டச் செயலாளர் முபாரக் புது குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார். இதனால், முட்டிமோதி சீட் வாங்கியும் நிம்மதியில்லாமல் கலக்கத்தில் இருக்கிறார்கள், ஆளுங்கட்சியின் கரைவேட்டிகள். இது போதாதென்று, ‘‘என்னை நம்பியிருக்கும் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தாக வேண்டும். அதனால், 50 சதவிகித சீட்டை எனக்குக் கொடுங்கள்” என மல்லுக்கட்டுகிறாராம் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன். இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிப்பால், ஊட்டியில் கோஷ்டி மோதலும் எரிமலையாக வெடிக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism