Published:Updated:

``சமமாக உணவருந்தினோம்" - தஞ்சை ஆணையரின் செயலால் நெகிழ்ந்த தூய்மைப் பணியாளர்கள்!

தூய்மைப் பணியாளர்கள் ( ம.அரவிந்த் )

``இந்த முறை அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் சமமாக நடத்தப்பட்டு எல்லோருக்கும் மத்தியிலும் நின்று சாப்பிட்டோம்.’’

``சமமாக உணவருந்தினோம்" - தஞ்சை ஆணையரின் செயலால் நெகிழ்ந்த தூய்மைப் பணியாளர்கள்!

``இந்த முறை அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் சமமாக நடத்தப்பட்டு எல்லோருக்கும் மத்தியிலும் நின்று சாப்பிட்டோம்.’’

Published:Updated:
தூய்மைப் பணியாளர்கள் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இந்தத் தேர்தலில் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் எண்ணப்பட்டுவருகின்றன. இதில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கான உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

வழக்கமாக, தேர்தல் பணிகளின்போது அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என ஒவ்வொரு தரப்புக்கும் தனித்தனியாக உணவு ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து உணவு தயார்செய்து பொட்டலம் போட்டுக் கொடுப்பார்கள். அதனால், உணவும் தரமில்லாமல் இருக்கும்.

தேர்தல் அதிகாரிகள்
தேர்தல் அதிகாரிகள்
ம.அரவிந்த்

இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் விழாக்களுக்குச் சமைப்பதுபோல் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே சமைத்து `சூடாக பஃபே' சிஸ்டம் முறையில் அனைவருக்கும் ஒரே இடத்தில் உணவு பரிமாறப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள் சாப்பிட்ட இடத்திலேயே மாநகராட்சி ஆணையரும் சாப்பிட்டார். அத்துடன் காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என அனைவரும் ஒரே இடத்தில் சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாட்டைச் செய்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரைப் பலரும் பாராட்டினர்.

இது குறித்துப் பேசிய தூய்மைப் பணியாளர் ஒருவர், ``அரசு முக்கிய நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் தூய்மைப் பணியாளர்கள் பெரிதாகக் கண்டு கொள்ளப்பட மாட்டோம். அத்துடன் சாப்பாடு உள்ளிட்ட அனைத்தையும் எங்களுக்கென தனியாகக் கொடுப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவல் துறையினர்
காவல் துறையினர்
ம.அரவிந்த்

ஆனால், இந்த முறை அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் சாப்பாடு சாப்பிட ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் சமமாக நடத்தப்பட்டு, எல்லோருக்கு மத்தியிலும் நின்று சாப்பிட்டோம். எங்களுக்கு அருகிலேயே ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் சாப்பிட்டனர். இந்த ஏற்பாட்டைச் செய்த ஆணையர் சரவணகுமார் செயல் மூலம் நாங்கள் பெருமிதம் அடைந்து நெகிழ்ந்தோம்" எனத் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism