Published:Updated:

நீடாமங்கலம் மறைமுகத் தேர்தல் சர்ச்சை: திமுக-வினரின் நூதனக் குறியீடு? - வழக்கு தொடுக்கிறதா அதிமுக?!

நீடாமங்கலம்

``இது மறைமுகத் தேர்தல். எந்த வேட்பாளருக்கு, எந்தெந்த கவுன்சிலர்கள் வாக்களித்தார்கள் என்பது தெரியக் கூடாது என்பதற்காகத்தான், தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.”

நீடாமங்கலம் மறைமுகத் தேர்தல் சர்ச்சை: திமுக-வினரின் நூதனக் குறியீடு? - வழக்கு தொடுக்கிறதா அதிமுக?!

``இது மறைமுகத் தேர்தல். எந்த வேட்பாளருக்கு, எந்தெந்த கவுன்சிலர்கள் வாக்களித்தார்கள் என்பது தெரியக் கூடாது என்பதற்காகத்தான், தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.”

Published:Updated:
நீடாமங்கலம்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் நூதனக் குறியீடு இருந்ததாகவும், இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது எனவும் இப்பகுதி அதிமுக-வினர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்நிலையில் இந்தச் சர்ச்சை தொடர்பாக அடுத்து என்ன நிகழும் என இப்பகுதியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நீடாமங்கலம்
நீடாமங்கலம்

தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்ற நிலையில் பிப்ரவரி 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள், மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல், மார்ச் 4-ம் தேதி நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் ராம்ராஜ், அ.தி.மு.க சார்பில் பரிமளா செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் 15 கவுன்சிலர்கள். இவர்களில் ராம்ராஜ் எட்டு வாக்குகள் பெற்றிருந்தார். பரிமளா செந்தமிழ்ச்செல்வன் ஏழு வாக்குகள் பெற்றிருந்தார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் ராம்ராஜ் வெற்றிபெற்றதாகத் தேர்தல் அலுவலர் ராஜசேகர் அறிவித்தார்.

ராம்ராஜுக்கு வாக்களித்த கவுன்சிலர்கள், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை எனவும், அந்த வாக்குகளைச் செல்லாத வாக்குகளாக அறிவிக்க வேண்டும் எனவும் அதிமுக-வினர் குற்றம்சாட்டினார்கள். நீடாமங்கலம் பேரூராட்சித் தலைவராக, ராம்ராஜ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை வாபஸ் பெற வேண்டும் என அதிமுக-வின் வேட்பாளர் பரிமளா செந்தமிழ்ச்செல்வன் தேர்தல் அலுவலரிடம் முறையிட்டார். இதைத் தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. இதையடுத்து தேர்தல் முடிவைக் கண்டித்து அ.தி.மு.க-வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நீடாமங்கலம்
நீடாமங்கலம்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த, பரிமளா செந்தமிழ்ச்செல்வன், ``நீடாமங்கலம் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராம்ராஜுவுக்கு எட்டு உறுப்பினர்களும் தேர்தல் விதிமுறைப்படி வாக்களிக்கவில்லை. ராம்ராஜுவுக்கு வாக்களித்த ஏழு கவுன்சிலர்களும், அவரது பெயரின் ஒவ்வொரு எழுத்திலும் `டிக்’ அடித்துள்ளார்கள். இது தேர்தல் விதிமுறைக்குப் புறம்பானது. ஆனால் அ.தி.மு.க உறுப்பினர்கள் தேர்தல் விதிப்படி வாக்களித்துள்ளோம். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே, இந்தத் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்” என்றார். இதனால் திருவாரூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் உருவானது.

அடுத்து என்ன நிகழும் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில்தான் நீடாமங்கலம் பகுதி அதிமுக பிரமுகரும், பேரூராட்சித் தலைவர் வேட்பாளர் பரிமளத்தின் கணவருமான செந்தமிழ்செல்வனிடம் நாம் பேசியபோது ‘’இது மறைமுகத் தேர்தல். எந்த வேட்பாளருக்கு, எந்த கவுன்சிலர் வாக்களித்தார் என்பது தெரியக் கூடாது என்பதற்காகத்தான், தேர்தல் ஆனையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. வேட்பாளரின் பெயருக்கு அருகிலுள்ள ஒரு பாக்ஸில் மட்டுமே கவுன்சிலர்கள் `டிக்’ அடிக்க வேண்டும். ராம்ராஜுக்கு வாக்களித்த கவுன்சிலர்கள் ஏற்கெனவே சொல்லி வைத்து, அவரது பெயரிலுள்ள ஒவ்வோர் எழுத்திலும் டிக் அடித்திருக்கிறார்கள். குறிப்பாக மூன்று கவுன்சிலர்கள் வாக்கு செலுத்திய வீதம், மிகவும் தவறானது. இந்த ஏழு வாக்குகளையுமே செல்லாத வாக்குகளாக அறிவித்திருக்க வேண்டும்.

இதில் நடந்துள்ள விதிமுறையை அம்பலப்படுத்திவிட்டோம். வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டோம். இதில் நூறு சதவிகிதம் தவறு நடந்துள்ளது. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால் அதேசமயம் நீடாமங்கலம் மக்களின் நலன் கருதியும், இப்பேரூராட்சியின் வளர்ச்சி கருதியும் இப்பிரச்னையை இதோடு விட்டுவிட்டு அமைதி காக்க நானும் என் மனைவியும் முடிவெடுத்துள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் எண்ணம் இல்லை. நீடாமங்கலம் பேரூராட்சித் தலைவராக என் மனைவி பத்தாண்டுகளு,ம் நான் துணை தலைவராக பத்தாண்டுகளும் பதவி வகித்துவிட்டோம். இந்த மனநிறைவே எங்களுக்குப் போதும். நீடாமங்கலம் பேரூராட்சியின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்’’ என்றார்.