Published:Updated:

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

சிவகங்கை நகராட்சி 20-வது வார்டில் தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் எம்.பி.ஏ இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவி பிரியங்கா (22).

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

சிவகங்கை நகராட்சி 20-வது வார்டில் தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் எம்.பி.ஏ இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவி பிரியங்கா (22).

Published:Updated:
‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!
‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் ஆனந்தம், அதிர்ச்சிக்கு மத்தியில் ஆச்சர்யம் தரும் வெற்றியாளர்கள் இவர்கள்!

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

கரூர் மாவட்டத்தில் இதுவரை பேரூராட்சியாக இருந்துவந்த புகழூர், முதன்முறையாக நகராட்சியாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், புகழூர் நகராட்சியின் 22 வது வார்டு கவுன்சிலராகியிருக்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்துமதி அரவிந்த்.

“சமீபத்தில் கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிச்ச 12 - ம் வகுப்பு மாணவி, தற்கொலை பண்ணிக்கிட்டா. ஆனா, பள்ளி நிர்வாகம் அதை மூடி மறைச்சது. அதுக்கு எதிராக என் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அது, புகழூர் மக்களுக்கு, குறிப்பாக பெண்பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் மத்தியில் ரீச் ஆச்சு. அதனால், தோழர்கள் என்னை நிக்கச் சொன்னாங்க. தொகுதியில் சரிசெய்ய வேண்டிய பிரச்னைகள் நிறைய இருக்கு” என்கிறார்.

- துரை.வேம்பையன், படம்: நா.ராஜமுருகன்

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

சிவகங்கை நகராட்சி 20-வது வார்டில் தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் எம்.பி.ஏ இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவி பிரியங்கா (22). 20வது வார்டில் இவர் 727 வாக்குகள் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க, பா.ஜ.க வேட்பாளர்களை டெபாசிட் இழக்கவும் செய்திருக்கிறார்.

- இரா.மணிமாறன்

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டில் 21-வயதே ஆன கெளசுகி தி.மு.க சார்பில் கவுன்சிலர் ஆகியுள்ளார். நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முடித்தவர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞருக்குப் படிக்க விண்ணப்பித்திருக்கிறார். “வக்கீல் படிச்சுட்டு நீதிபதி ஆகணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. அதுவரைக்கும் மக்கள் பணி செய்யலாம்னு அரசியலுக்கு வந்திருக்கிறேன்” என்பவர், “தாத்தா காலத்திலிருந்து நாங்க தி.மு.க குடும்பம்” என்கிறார்.

- ஆர்.சிந்து, படம்: ரா.ராம்குமார்

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

தமிழகத்திலேயே ஒரே குடும்பத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தந்தை, மகள், மகன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட ஏரல்தேர்வு நிலைப் பேரூராட்சியில் 15வது வார்டில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் ரமேஷ். இவரின் மகள் மதுமிதா, 2வது வார்டில் போட்டியிட்டும், மகன் பாலகெளதம் 1வது வார்டிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

- இ.கார்த்திகேயன், படம்: எல்.ராஜேந்திரன்

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

நெல்லை மாநகர தி.மு.க-வில் 35-வது வார்டு செயலாளராக இருந்த பொன்னுதாஸ் என்பவர் வீட்டின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அவர் குடியிருக்கும் வார்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தாய் பேச்சியம்மாளை நிறுத்த ஏற்பாடு செய்துவந்த நிலையில் கொல்லப்பட்டார். அரசியல் பகையின் காரணமாக அவர் கொல்லப்பட்டதைக் கண்டுபிடித்த காவல்துறை , 11 பேரைக் கைது செய்தது. கொலையான பொன்னுதாஸின் தாய் பேச்சியம்மாள், தன் மகனின் ஆசைப்படியே அந்த வார்டில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டார். இத்தனைக்கும் ஆழ்ந்த சோகத்தில் இருந்த பேச்சியம்மாள் பிரசாரத்துக்கே செல்லவில்லையாம்.

- ஆண்டனிராஜ், படம்: எல்.ராஜேந்திரன்

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

மயிலாடுதுறை நகராட்சியில் நகரின் இதயப்பகுதியான பேருந்து நிலையம், பட்டமங்கலத்தெரு, பெரிய கடைத்தெரு, காவிரி துலாக்கட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய 16-வது வார்டில் தி.மு.க-வைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சௌந்தர்யன் வெற்றிபெற்றிருக்கிறார்.

- மு.இராகவன்

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

வேலூர் மாநகராட்சி 28-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகியிருக்கிறார் 2கே கிட்டான பி.எஸ்ஸி வேளாண்மை நான்காம் ஆண்டு மாணவி மம்தா குமார். தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளில், அறிவாலயம் சென்ற மம்தா குமாரை அருகில் அழைத்து வாழ்த்தியதுடன், சிலநிமிடம் அவரிடம் உரையாடினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். “படிப்பை நிறைவுசெய்ய இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. மதியம் வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மதியத்துக்குமேல் வார்டைச் சுற்றிவருவேன்’’ என்கிறார் மம்தா குமார்.

- லோகேஸ்வரன்.கோ, படம்: ச.வெங்கடேசன்

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!
‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் அ.ம.மு.க தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் மா.சேகர். இவரின் மனைவி திருமங்கை சேகர். இரண்டு பேரும் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்கள். அதுவும் இது நான்காவது முறையாம்.

அதேபோல் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில், அண்ணன் தம்பி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். பா.ம.க-வில் முன்னாள் மாநிலத் துணைத் தலைவராக இருந்தவர் ம.க.ஸ்டாலின். அவரின் தம்பி ம.க.பாலதண்டாயுதம் இருவரும்தான் வெற்றிக்கொடி நாட்டிய சகோதரர்கள்.

- கே.குணசீலன், படங்கள் : ம.அரவிந்த்

‘வேற மாதிரி’ வெற்றியாளர்கள்!

திண்டுக்கல் மாநகராட்சி 17 ஆவது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 1,229 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் 22 வயதான வெங்கடேஷ். சட்டம் படித்துள்ள இவர், சேகர் ரெட்டிக்கு நெருக்கமான கோடீஸ்வரரான திண்டுக்கல் சர்வேயர் ரெத்தினத்தின் மகன். தி.மு.க, அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் முதல் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் வரை தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தும், வெங்கடேஷ் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

- மு.கார்த்திக், படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

மன்னார்குடி நகர்மன்றத்தில் மொத்தம் 33 வார்டுகள். இந்த 33 வார்டுகளிலும் வெற்றி பெற்றவர்கள், முதல் முறையாகப் போட்டியிட்டு கவுன்சிலர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது ஆச்சர்யம்தான்.

- கு.ராமகிருஷ்ணன்