Published:Updated:

`எத்தனை வாக்குகள் முன்னிலையில் உள்ளேன்?' - டிரெண்டான சன்னி லியோன் ட்வீட்

சத்யா கோபாலன்
`எத்தனை வாக்குகள் முன்னிலையில் உள்ளேன்?' - டிரெண்டான சன்னி லியோன் ட்வீட்
`எத்தனை வாக்குகள் முன்னிலையில் உள்ளேன்?' - டிரெண்டான சன்னி லியோன் ட்வீட்

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் படி பா.ஜ.க  340 தொகுதிகளிலும், காங்கிரஸ் 90 தொகுதிகளிலும், இதரக் கட்சிகள் 112 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

`எத்தனை வாக்குகள் முன்னிலையில் உள்ளேன்?' - டிரெண்டான சன்னி லியோன் ட்வீட்

இந்தத் தேர்தலில் பா.ஜ.கவை பொறுத்தவரை பல பிரபலங்களைக் களத்தில் இறக்கியுள்ளது. கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், பாலிவுட் நடிகர் சன்னி தியோல் போன்ற பலர் அந்தக் கட்சியில் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர். இதற்கிடையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் அனைத்து மீடியாக்களும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

`எத்தனை வாக்குகள் முன்னிலையில் உள்ளேன்?' - டிரெண்டான சன்னி லியோன் ட்வீட்

இந்நிலையில் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் அர்னாப், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி தியோல் முன்னிலையில் உள்ளார் எனக் கூறுவதற்குப் பதிலாக சன்னி லியோன் (நடிகை) முன்னிலையில் உள்ளார் எனத் தவறுதலாகக் கூறிவிட்டார். இதை நோட் செய்த நெட்டிசன்கள் அவர் பேசியதை மட்டும் தனி வீடியோவாக ஷேர் செய்து வருகின்றனர்.

`எத்தனை வாக்குகள் முன்னிலையில் உள்ளேன்?' - டிரெண்டான சன்னி லியோன் ட்வீட்

இந்த வீடியோ எப்படியோ நடிகை சன்னி லியோன் கண்ணில் பட அதற்கு அவர், ``நான்  எத்தனை வாக்குகள் முன்னிலையில் உள்ளேன்’ என காமெடியாக ட்வீட் செய்துள்ளார். இவரின் ட்வீட் தான் தற்போது செம்ம வைரல். சன்னி லியோனின் கேள்விக்குப் பலரும் பதில் அளித்து வருகின்றனர். அதில், `135 கோடி இந்திய மக்களின் ஓட்டும் உங்களுக்குத்தான்’ என்பது போன்ற ட்வீட்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 

`எத்தனை வாக்குகள் முன்னிலையில் உள்ளேன்?' - டிரெண்டான சன்னி லியோன் ட்வீட்