Published:Updated:

`கேபினட்டில் சக்திகாந்த தாஸ், ஓ.பி.எஸ். மகன்?!' - கோட்டையில் நடக்கும் விவாதம்

ஆர்.பி.
`கேபினட்டில் சக்திகாந்த தாஸ், ஓ.பி.எஸ். மகன்?!' - கோட்டையில் நடக்கும் விவாதம்
`கேபினட்டில் சக்திகாந்த தாஸ், ஓ.பி.எஸ். மகன்?!' - கோட்டையில் நடக்கும் விவாதம்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி நகர்கிறது. 

பன்னீர் மகன் ஜெயித்தால் மத்திய இணை அமைச்சர்? 

`கேபினட்டில் சக்திகாந்த தாஸ், ஓ.பி.எஸ். மகன்?!' - கோட்டையில் நடக்கும் விவாதம்

தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி இரண்டு தொகுதியில் மட்டுமே முன்னணியில் உள்ளது. தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் மாலை 3 மணி நிலவரப்படி முன்னணியில் இருக்கிறார். அவரைவிட 28,000 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் பின்தங்கியிருக்கிறார். ஓட்டு எண்ணிக்கை முடிவில், ஒருவேளை ரவீந்திரநாத் ஜெயித்தால், அவர் மத்தியில் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க அரசில் இணை அமைச்சர் பதவி தரப்படுமென தெரிகிறது. தமிழகத்துக்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதால், ரவீந்திரநாத்துக்கு சான்ஸ் அடிக்குமென தெரிகிறது.  

கேபினேட் செகரட்டரி ஆகிறார் கிரிஜா வைத்தியநாதன்?

`கேபினட்டில் சக்திகாந்த தாஸ், ஓ.பி.எஸ். மகன்?!' - கோட்டையில் நடக்கும் விவாதம்

மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் பி.ஜே.பி. ஆட்சி அமைத்தால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டெல்லிக்குச் செல்கிறார். மத்திய அரசின் பவர்ஃபுல் பதவிகளில் முக்கியமானது கேபினேட் செகரட்டரி. இந்தப் பதவிக்கு கிரிஜா செல்லப்போகிறார் என்று ஐ.ஏ.எஸ். வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில், தற்போது பி.ஜே.பி. அறுதிப் பெரும்பான்மை சீட்டுகளைப் பெற்றுவிட்டது. கிரிஜா வைத்தியநாதன் அடுத்த மாதத்துடன் ஒய்வு பெறுகிறார். அதற்கு முன்பு, அவரை மத்திய அரசுப் பணிக்கு மாற்றி கேபினேட் செகரட்டரி பதவியில் அமர வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. மேலும், சில வருடங்கள் அந்தப் பதவியில் அவர் இருப்பாராம். 

மத்திய நிதி அமைச்சராக சக்தி காந்த தாஸுக்கு வாய்ப்பு? 

`கேபினட்டில் சக்திகாந்த தாஸ், ஓ.பி.எஸ். மகன்?!' - கோட்டையில் நடக்கும் விவாதம்

தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்தி காந்த தாஸ். பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவர். மத்திய அரசின் வருவாய்த் துறையின் செயலாளராக பணியாற்றினார்.  பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர். மோடியின் மக்கள் நலத் திட்டங்களை வடிவமைத்ததில் மோடி ஆலோசகராக திகழ்ந்து வருகிறார். ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் தற்போது இருக்கிறார் சக்தி காந்ததாஸ். தற்போது, நிதி அமைச்சராக இருக்கும் அருண் ஜெட்லிக்கு உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. அதனால், அந்தப் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்கிற பேச்சு எழுந்துள்ளது. சக்திகாந்ததாஸை நிதி அமைச்சர் பதவியில் உட்காரவைக்க நினைக்கிறார் மோடி. அடுத்த மாதம் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர்கள் இடங்களில் ஒன்றை சக்தி காந்த தாஸுக்கு அளித்து அவரை எம்.பி-யாக ஆக்கி மத்திய நிதி அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.