Published:Updated:

மின் கட்டண கணக்கெடுப்பு: நவீன முறையில் செயலியை உருவாக்க மின்வாரியம் முடிவு!

தமிழ்நாடு மின்சார வாரியம்
News
தமிழ்நாடு மின்சார வாரியம்

கடந்த பிப்ரவரி முதல் தமிழ்நாட்டில் சோதனை முறையாக, மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் முறையை, தமிழக மின்வாரியம் அறிவித்து செயல்படுத்தியது. இந்தச் செயலியை மின்வாரிய ஊழியர்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினர்.

இரு மாதங்களுக்கு ஒரு முறை வீடுதோறும் மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று மின்சார பயன்பாட்டைக் கணக்கெடுத்து வருகின்றனர். இதை மின்வாரிய அலுவலகத்தில் கணக்கிட்டு, கட்டண விபரம் நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்புகின்றனர்.

மின் கட்டண கணக்கெடுப்பு: நவீன முறையில் செயலியை உருவாக்க மின்வாரியம் முடிவு!

சில சமயங்களில் சரியான நேரத்தில் கணக்கு எடுக்காததால், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு தாமதமாகத் தெரியவந்தது. இந்த பிரச்னைக்குத் தீர்வு காண மொபைல் செயலி அறிமுக மானது, கடந்த பிப்ரவரி முதல் தமிழ்நாட்டில் சோதனை முறையாக, மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் முறையை, தமிழக மின்வாரியம் அறிவித்து செயல்படுத்தியது. இந்தச் செயலியை மின்வாரிய ஊழியர்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினர்.   

இதன் மூலம் மின்கட்டண கணக்கெடுப்பின்போது, கட்டண விபரம், இந்தச் செயலியில் கணக்கிட்டு வந்துவிடும். அந்தத் தகவல் சில நிமிடங்களில், நுகர்வோரின் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் சென்றுவிடும்.

மின் கட்டண கணக்கெடுப்பு
மின் கட்டண கணக்கெடுப்பு

இந்த நடைமுறையில், கணக்கெடுக்கும் தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்கள் மொபைல் செயலியில் தெரியும் என்பதால் ஊழியர்கள் உரிய காலத்தில் கட்டாயம் நேரில் சென்றாக வேண்டும், தாமதமாகக் கணக்கெடுக்க முடியாது. இதனால் மக்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தைச் செலுத்த முடியும், தேவையற்ற தாமதக் கட்டணத்தைத் தவிர்க்க முடியும்.   

இந்தச் செயலியை தமிழக அரசின் நிறுவனம் மூலமாக செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்ததில், சிரமங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திட்டத்தை மேம்படுத்த 69 லட்சம் ரூபாய் செலவில், மொபைல் செயலி உருவாக்கம், பராமரிப்பு ஆகிய ஒருங்கிணைப்புப் பணிகளை மின்வாரியமே செய்ய முடிவெடுத்துள்ளது.