Published:Updated:

`முதன்முறையாக ஆர்டிக்கில் பதிவான 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை!’- என்ன நடக்கும்?

ஆர்டிக்
ஆர்டிக்

காலநிலை மாற்றத்தின் விளைவாக, ஆர்டிக் வட்டத்தில் பிற வெப்பமண்டலங்களைவிட அதிக வெப்பநிலை உயர்ந்திருக்கிறது.

ஆர்டிக் வட்டத்திற்குள் அமைந்துள்ள ஒரு ரஷ்ய நகரத்தின் வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை அன்று 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டியது. இதுவே ஆர்டிக் வட்டத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக அறியப்படுகிறது.

ஜூன் மாதத்தில், ரஷ்யாவின் வெர்கோயன்ஸ்கில் சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 68 ° F ஆகும். ஆனால், தற்போது சராசரி வெப்பநிலையை விட 30 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியிருக்கிறது. வெர்கோயன்ஸ்க் ஆண்டின் குளிர்ந்த மாதமான ஜனவரியில், குறைந்தபட்சமாக சராசரி வெப்பநிலையாக 44 ° F பதிவாகும். கடந்த மே மாதத்தில் சைபீரியாவின் வெப்பநிலை சராசரியை விட 18 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருந்துள்ளது. இதுவே, இதுவரை பதிவிடப்பட்ட அதிகமான வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டிக்
ஆர்டிக்

இவ்வாறான அதிக வெப்பநிலை, ஆபத்தான காட்டுத் தீ விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது. ``காட்டுத் தீயால், நிலத்தடியில் எரியும் சிதைந்த கரிமப் பொருட்கள், மேற்பரப்பில் புகையை ஏற்படுத்துகிறது" என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் வானிலை கண்காணிப்பு சேவையின் (CAMS) விஞ்ஞானி டாக்டர் மார்க் பாரிங்டன் கூறினார். காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் 6,80,000 ஏக்கருக்கு மேல் எரிந்து கொண்டிருப்பதாக ரஷ்ய கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில், பூமியின் வெப்பநிலையின் சராசரி அதிகரிப்பு 1.44 ' ° F ஆகும். இதனை ஒப்பிடுகையில், அதே காலகட்டத்தில் ஆர்டிக்கில் 3.5 ' ° F -க்கும் அதிகமாக வெப்பமடைந்துள்ளது. இது, உலக சராசரியைவிட இரு மடங்கிற்கும் அதிகமாகும். காலநிலை மாற்றத்தின் விளைவாக துருவங்கள் வேகமாக வெப்பமடைகின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவாக ஆர்டிக் வட்டத்தில், பிற வெப்பமண்டலங்களை விட அதிகப்படியான வெப்பநிலை உயர்ந்திருக்கிறது.

நாசா ஆய்வு முடிவில், வளிமண்டல செயல்முறைகளிலிருந்து பெரிய அளவிலான ஆற்றல் போக்குவரத்து காரணமாக பூமியின் துருவங்கள் மற்ற கிரகங்களைவிட வேகமாக வெப்பமடைகின்றன. வெப்பமயமாதல் தொடர்கையில் இத்தகைய அமைப்புகள் அதிகரிக்கின்றன. இதனால் துருவங்களுக்கு அதிக வெப்பத்தைக் கொண்டுவருகின்றன.

Vikatan

துருவங்களின் பிரதிபலிப்பு (ஆல்பிடோ) மாற்றத்தால் வெப்பமயமாதலும் அதிகரிக்கிறது. கடல் மற்றும் நிலப் பனி (இவை மிகவும் பிரதிபலிக்கும்) உருகி, பாறை மற்றும் தாவரங்களை வெளிப்படுத்துகிறது (இவை மிகவும் குறைவான பிரதிபலிப்பு). ஆகவே, உயர் அட்சரேகை நாடுகளில் (கனடா, ரஷ்யா, ஸ்காண்டிநேவியா போன்றவை) வசிப்பவர்கள் குறைந்த அட்சரேகை நாடுகளில் (பிரேஸில், இந்தோனேசியா, ஈக்வடார் போன்றவை) வசிப்பவர்களைக் காட்டிலும் கணிசமாக அதிக வெப்பமயமாதலை அனுபவிப்பார்கள்.

காலநிலை மாற்றம் காரணமாக வெப்பமயமாதலின் வேகம் எதிர்பார்ப்புகளைவிட அதிகமாக உள்ளது. குறிப்பாக துருவங்களில், கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான வெப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது. கால நிலை மாற்றம் காரணமாக 100 டிகிரி ஃபாரஹீட்டுக்கு அதிகமான வெப்பநிலையை 2100 வரை ஆர்டிக் பகுதியில் பதிவாகாது என ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். துருவப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும்பட்சத்தில், பனிக்கட்டிகள் உருகி கடல் நீர்மட்டம் உயரும். இதனால், பல சிறிய நாடுகள், குட்டித் தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு