Published:Updated:

கரூர் கல்வியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு கருத்தரங்கு!.

கரூர் கல்வியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு கருத்தரங்கு!.
கரூர் கல்வியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு கருத்தரங்கு!.

கரூர் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் ஜே.சி.ஐ கரூர் டைமண்ட் மற்றும் தொழில் கூட்டமைப்பு சி.ஐ.ஐ-யின் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில், கல்லூரியின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார்.

பரணிபார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் சி.ராமசுப்ரமணியன்,'சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வோர் ஆசிரியரின் கடமை என்றும், இக்கடமையைச் சரிவர செய்தால், நல்ல சூழலை உடைய சமுதாயம் மலரும்' என்றும் சிறப்புரை வழங்கினார். இவ்விழாவில் சி.ஐ.ஐ-யின் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் கரூர் தலைவர் வீரா.ராஜேந்திரன், விழாவைத் தொடங்கிவைத்து அறிமுக உரையாற்றினார். 

கருத்தரங்கத்தின் கருத்தாளர் ஜே.சி.வி.ரமேஷ், பயிற்சி ஆசிரியர்களுக்கு நீடித்த, நிலையான வளர்ச்சியின் நோக்கங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம்குறித்தும், இயற்கை எரிவாயுவின் பயன்கள் குறித்தும் கருத்துரையாற்றினார். எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் திருமதி பி.சாந்தி, முன்னதாக வரவேற்புரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் ராஜ்குமார், நன்றியுரை வழங்கினார்.