Published:Updated:

கோவை: மான்கறி வைத்திருந்தவர்களுக்கு அபராதம்!

கோவை: மான்கறி வைத்திருந்தவர்களுக்கு அபராதம்!
கோவை: மான்கறி வைத்திருந்தவர்களுக்கு அபராதம்!

கோவை: மான்கறி வைத்திருந்தவர்களுக்கு அபராதம்!

கோவையில் மான்கறி வைத்திருந்த இரண்டு பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

கோவை: மான்கறி வைத்திருந்தவர்களுக்கு அபராதம்!

கோவை தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, வனப்பகுதியில் உள்ள மான் ஒன்றை வேட்டையாடியுள்ளார். வேட்டையாடிய மானின் கறியில் பாதியை அவர் எடுத்துக் கொண்டு, மீதியை காளையனூரில் உள்ள பார் ஒன்றுக்கு விற்பனை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து, பாரில் வேலை செய்யும் முருகானந்தம் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தல்படி, இருவருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மானை வேட்டையாடிய, அய்யாசாமி மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, தலைமறைவாகியுள்ள அய்யாசாமியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, இன்று மாலை மேலும் இரண்டு பேரை கைது செய்து, வனத்துறை விசாரித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு