Published:Updated:

300 முறைகள் விஷப்பாம்பு கடித்தும் உயிர் தப்பிய வாவா சுரேஷ்! #WildlifeConservationist

300 முறைகள் விஷப்பாம்பு கடித்தும் உயிர் தப்பிய வாவா சுரேஷ்! #WildlifeConservationist

300 முறைகள் விஷப்பாம்பு கடித்தும் உயிர் தப்பிய வாவா சுரேஷ்! #WildlifeConservationist

300 முறைகள் விஷப்பாம்பு கடித்தும் உயிர் தப்பிய வாவா சுரேஷ்! #WildlifeConservationist

300 முறைகள் விஷப்பாம்பு கடித்தும் உயிர் தப்பிய வாவா சுரேஷ்! #WildlifeConservationist

Published:Updated:
300 முறைகள் விஷப்பாம்பு கடித்தும் உயிர் தப்பிய வாவா சுரேஷ்! #WildlifeConservationist

தேளிடம் ஒரு முறை கொட்டு வாங்கினாலே வாழ்க்கை முழுவதும் மறக்க மாட்டோம். 300 முறை பாம்பு கடித்தும் ஒரு மனிதர் உயிருடன் இருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தானே...!

பாம்புகள் என்றாலே நம்மை அறியாமலே அருவருப்பும் பயமும் வந்துவிடும். பாம்பை பார்த்ததும் அடித்துக் கொல்லவே ஓடுவோம். ஆனால், பல்லுயிர் சமன்பாட்டுக்குப் பாம்புகள் மிக அவசியம். மக்களிடையே பாம்புகள் பற்றிய விழிப்பு உணர்வு ஓரளவுக்கு உருவாகியுள்ளதால், வீடுகளில் பாம்புகள் தென்பட்டால் இப்போதெல்லாம், வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கிறார்கள். தொழில்முறை பாம்பாட்டிகளைத் தாண்டி, உயிர்கள் மீது அக்கறை கொண்ட ஏராளமான தன்னார்வ பாம்பு பிடிப்பாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். பாம்புகளைப் பிடிப்பதைத் தொழிலாகப் பார்க்காமல் கலையாகவும் பார்க்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் அந்த ரகம்தான். 'பாம்பு பிடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றால், என் உடலில் உயிர் இல்லை'' என்று அர்த்தம் என்கிறார் இந்தப் பாம்பு பைத்தியம்!

திருவனந்தபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, வாவா சுரேஷின் செல்போன் நள்ளிரவில் கூட சிணுங்கும். எதிர்முனையில் இருப்பவர்கள் ஒருவித பதற்றத்துடன் பேசுவார்கள். கண்ணைக் கசக்கிக்கொண்டு, பாம்பு பிடிக்கும் கம்பியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவார்.  இரு நாள்களுக்கு முன், வாவா சுரேஷுக்கு போன்செய்து, ‘சார் உங்களைச் சந்திக்க வேண்டும்' என்றபோது, 'நான் எப்போ எங்கே இருப்பேனு சொல்ல முடியாது. நீங்க திருவனந்தபுரம் வாங்க, நான் அங்கே இருந்தால் உங்களைக் கண்டிப்பாகச் சந்திக்கிறேன் '' என பதில் சொன்னார் ஒரு வார காலமாயிற்று. மனிதரைப் பிடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு பிஸியான ஒரு பாம்பாட்டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாளொன்றுக்கு குறைந்தது 100 அழைப்புகள் வரும். அதில், 20 இடங்களுக்காவது சுரேஷ் நேரடியாகச் சென்று விடுவார். பாம்பு பிடிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கவனம் தப்பினால் மரணம்தான். புலிகள் கழுத்தில் தொங்கும் சயனைடு குப்பி போல, பாம்பு விஷ முறிவு மருந்து எப்போதும் வாவா சுரேஷ் வசம் இருக்கும். அதற்கான சிறப்பு அனுமதியும் அவருக்கு உள்ளது. இந்த முன்னெச்சரிக்கைதான் அவரின் உயிரையும் இதுநாள்வரை காத்து வந்திருக்கிறது.

பாம்பு பிடிக்க சுரேஷ் கற்றுக்கொண்டதும் விபத்து போலவே நடந்தது. பன்னிரண்டு வயது நிரம்பிய சுரேஷ் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, குளத்துக்கரையில் பாம்பு ஒன்றை பார்த்துள்ளார். விஷமில்லாத தண்ணீர் பாம்பு அது. அதைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளார். பதறிய அவரின் அம்மா... 'அந்தச் சனியனைக் கொண்டு வெளியே போடு ' என்று கத்தியிருக்கிறார். உண்மையில் பாம்பைக் கண்டால், இந்த வார்த்தைததானே வாயிலிருந்து வரும். பாம்பை வெளியே வீசி விட்டு வந்த, சுரேஷுக்கு செம அடி விழுந்தது. அன்றைக்கு விழுந்த அடிதான் அவரை அறியாமலேயே பாம்புகள் மீது ஆர்வத்தை உருவாக்கியது.

தாயாருக்குத் தெரியாமல் பாம்புகளைத் தேடி அலையத் தொடங்கினார். விஷமற்ற பாம்புகளை விளையாட்டுத்தனமாக பிடிக்கத் தொடங்கி, மின்னல் வேகத்தில் அட்டாக் செய்யும் கட்டுவிரியன்களைக் கூட கட்டுக்குள் வரும் கலையைக் கற்றார். பாம்பு பிடிக்கும் ரகசியத்தை சுரேஷுக்கு யாரும் சொல்லித் தரவில்லை. ஆர்வமிகுதியால் பாம்புகளைப் பற்றிப் படித்துப்படித்து அவரே, கற்றுக்கொண்ட வித்தை இது. தற்போது 41 வயது நிரம்பிய சுரேஷின் 27 வருட பாம்பு பிடி வாழ்க்கையில், 50 ஆயிரம் பாம்புகளைப் பிடித்திருக்கிறார். அதில், ராஜநாகங்கள் மட்டும் 121 . நாகங்களில் ராஜநாகங்களின் விஷம் யானைகளைக் கொல்லக்கூடியவை. 20 அடி நீளம் வரை வளரக் கூடியவை. அந்த ராஜநாகங்களையே குழந்தை போல கையாள்கிறார் வாவா சுரேஷ். ஆனால், விரியன் ரகங்களைக் கவனத்துடன் கையாள்வார். அவற்றை வைத்து மட்டும் விளையாட்டுக் காட்டுவதில்லை.

இதுவரை, சுரேஷை 3000 தடவை  பாம்புகள் கடித்துள்ளன. 300 முறை விஷப்பாம்புகள் தீண்டியுள்ளன. 10 முறை ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிழைத்துள்ளார். கையில் ஓர் ஆள்காட்டி விரல் பாம்பு கடித்ததில் துண்டாகிவிட்டது. மணிக்கட்டு டேமேஜ் ஆகியிருக்கிறது. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத இந்தத் தொழிலை விட்டுவிடுமாறு, குடும்பத்தினர் மன்றாடியும் பாம்பு பிடிப்பதை அவர் நிறுத்தவில்லை. பாம்பு மனிதர்களைத் தீண்டி ரத்தத்தில் விஷம் கலந்தால் மட்டுமே உயிருக்கு ஆபத்து. மற்றபடி, பாம்பு விஷத்தை குடித்தால் கூட உயிருக்கு ஆபத்தில்லை. இதை, நிரூபிப்பதற்காக ஒருமுறை பாம்பு விஷத்தையும் மக்கள் மத்தியில் குடித்துக் காட்டினார். விஷம் என்பதையும் தாண்டி உயிர் காக்கும் பல மருந்துகள் தயாரிக்கக் கூட பாம்பு விஷம்தானே மூலகாரணம். இது குறித்த விழிப்புஉணர்ச்சி நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தி வருகிறார்.

பல்லுயிர் சமன்பாட்டுக்காக வாவா சுரேஷ் ரிஸ்க் எடுத்துக்கொண்டிருக்க, அவரை மனதளவில் காயப்படுத்தும் சம்பவங்களும் நடக்காமல் இல்லை. பிடிபடும் பாம்புகளை வாவா சுரேஷ்,  வனத்துறையினர் ஒப்படைப்பார் அல்லது அவரே காடுகளில் விட்டு விடுவார். சுரேஷ் தான் பிடிக்கும் பாம்புகளின் விஷத்தை எடுத்து மருந்து நிறுவனங்களுக்கு விற்பதாக வதந்தி பரவியது. நொந்துபோன அவர், பாம்பு பிடிக்கும் தொழிலையே விட்டுவிடப் போவதாக அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால், சுரேஷின் போன் சிணுங்குவதை நிறுத்தவில்லை. இனிமேல், அவரின் பாம்பு பிடி பயணத்தை அவரே நினைத்தாலும் நிறுத்தமுடியாது.

பாம்பு பிடிக்கும் இடங்களில் வாவா சுரேஷ் பெரும்பாலும் பணம் வாங்குவதில்லை. பாம்பு பிடிக்கும் இடங்களில் அவர்கள் கொடுப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். அதுவும், போக்குவரத்துச் செலவுக்காக மட்டுமே. ரோட்டரி, லயன்ஸ் கிளப்புகள் சுரேஷுக்குத் தேவையான நிதியுதவியைச் செய்கின்றன. சுரேஷின் திறமையை மெச்சி, கேரள வனத்துறையில் அவருக்குப் பணி வழங்கப்பட்டது. 'மக்களுக்குச் சேவை செய்வதற்காக கடவுள் என்னை அனுப்பியிருக்கிறார் ' என்று அரசு வேலையை ஏற்க மறுத்து விட்டார்.

''பாம்புகள் மனிதர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட அப்பாவி உயிரினங்கள். என்னைப் பொறுத்தவரை அவை ப்யூட்டி பீப்புள்ஸ் '' என்று  இந்தச் சத்ரியன் அடிக்கடி கூறுவார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism