Published:Updated:

வைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே?

வைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே?
பிரீமியம் ஸ்டோரி
வைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே?

வைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே?

வைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே?

வைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே?

Published:Updated:
வைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே?
பிரீமியம் ஸ்டோரி
வைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே?

துரை நகரின் குப்பைத்தொட்டியைப்போல மாற்றப்பட்டுவிட்ட வைகை நதியைத் தூய்மைப்படுத்துவதற்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.120 கோடி செலவு செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், அந்த நிதி எங்கே என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

தேனி மாவட்டம் வருசநாடு மலையில் உற்பத்தியாகும் வைகை நதி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்பட ஆறு மாவட்டங்களுக்கு நீராதாரமாக விளங்குகிறது. ஆனால், மதுரையில் வைகையை மாநகரின் ஒரு குப்பைத் தொட்டியைப்போல மாற்றிவிட்டனர். சாக்கடையைக் கலந்துவிடுவது, இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவது என வைகையை நாசப்படுத்திவருகிறார்கள். வைகையில் தொடர்ந்து மணல் திருடப்படுவதால், அது கட்டாந்தரையாக மாறிவிட்டது.

வைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே?

விருதுநகரில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை காளவாசல் பகுதியில் ரூ.54.7 கோடிக்குப் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது, ‘‘வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்படும். ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பூங்காக்கள் அமைக்கப்படும்” என்று கூறினார். ஆனால், ‘வைகை நதியைச் சீரமைப்பதற்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு 120 கோடி ரூபாய் வழங்கியது. அந்த நிதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் படவில்லை’ என வைகை நதி மக்கள் இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜனிடம் பேசினோம். “வைகையில் கருவேல மரங்களும் ஆகாயத்தாமரையும் மண்டியுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கழிவுகள் கொட்டப்படுவதாலும் , வைகை பெருமளவு மாசடைந்துள்ளது. எனவே, வைகை நதியைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடமும், மதுரை மாநகராட்சியிடமும் மனு அளித்தோம். போதுமான நிதி ஆதாரம் இல்லை என்று கைவிரித்துவிட்டனர். எனவே, வைகை நதியைச் சீரமைக்க உதவும்படி பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பினோம்.

இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், தேசிய நதிகள் பாதுகாப்பு இயக்ககத்தின் சார்பில் வைகை நதியைச் சீரமைக்க ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகத்தை அணுகியபோது, ஸ்மார்ட் சிட்டி தவிர வேறு எதற்காகவும் மத்திய அரசின் சார்பில் எந்த நிதியும் வரவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

வைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே?

அதனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இதுகுறித்து தகவல்களை மத்திய நதிகள் மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து பெற்றோம். வைகை நதி பராமரிப்புக்கு ரூ.120 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு, அதில் ரூ.63.34 கோடியைச் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியத்துக்கு அனுப்பியதாகத் தகவல் தந்துள்ளனர். ரூ.63.34 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் குறித்துத் தகவல் கேட்டபோது, ‘அதில் ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யப்படவில்லை’ என்ற தகவல் கிடைத்தது.

இதன்மூலம், மத்திய அரசு வழங்கிய நிதியை, வைகை நதி சீரமைப்புக்குப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்ன ஆனது என்று அதிகாரிகளிடம் கேட்டால், எங்களுக்கு இதுபற்றித் தெரியாது என்கிறார்கள். மத்திய அரசின் நிதி என்ன ஆனது என்று அரசு பதில் சொல்ல வேண்டும். அந்த நிதியில், வைகையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் மறுசுழற்சி மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். 

வைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே?

இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகரிடம் கேட்டதற்கு, “நீங்கள் குறிப்பிடும் விஷயம், பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியத்தின் வழியாகத்தான், வைகை பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே, முழுமையான தகவல்களுக்கு நீங்கள் அவர்களைத்தான் கேட்க வேண்டும்’’ என்றார்.

மதுரை மாநகராட்சியின் நகர் பொறியாளர் மதுரம், “தேசிய நதிகள் பாதுகாப்பு இயக்ககம், இந்தியா முழுவதும் பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இதன்கீழ் மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 50 சதவிகிதப் பணத்தைக் கொண்டு, 2002-ம் ஆண்டு வைகையில் மதுரையின் பாதாளச் சாக்கடைக் கழிவுகள் கலப்பதைக் கட்டுப்படுத்தினோம். மத்திய அரசு ஒதுக்கும் பணத்தை முறையாக மட்டுமே பயன்படுத்த முடியும். அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள், அவ்வப்போது தணிக்கை செய்யப்படுகின்றன. எனவே, இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை” என்றார் உறுதியாக.

சென்னைக்குக் கூவம்போல, மதுரைக்கு வைகை என்று ஆவதற்குள், வைகை காப்பற்றப்பட வேண்டும்.

- அருண் சின்னதுரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வி.சதீஷ்குமார்