Published:Updated:

இந்தியா

இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா

இந்தியா

இந்தியா

இந்தியா

Published:Updated:
இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா

ஆதரிப்போம் சூரிய சக்தி மின்சாரம்!

இந்தியா``உலகம் முழுக்க மாற்று எரிபொருள் முயற்சிகள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. இனிமேலும் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்றவற்றை நம்பியிருக்காமல், சூரிய ஒளி, காற்று போன்றவற்றைப் பயன்படுத்தி நமக்கான ஆற்றலை உருவாக்கிக்கொள்ள வேண்டும்’’ என்கிறார்கள் நிபுணர்கள். அரசாங்கமும் தனியார் அமைப்புகளும் இதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. ஆனால், இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும், இந்தியாவில் சூரிய ஒளி ஆற்றல் திட்டங்கள் நல்ல பலன் தரவில்லை. மக்கள் ஏனோ இவற்றை அதிகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியா

இந்தப் புதிருக்கான காரணத்தை, சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்ட ஓர் அறிக்கை விளக்குகிறது. `சூரிய ஒளி, ஆற்றல் சிறந்தது என்பது மக்களுக்குத் தெரிந்தாலும் அதற்குத் தேவைப்படும் சாதனங்களின் விலை மிக அதிகமாக இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். சோலார் சாதனங்களின் விலையைப் பாதியாகக் குறைத்தால், இன்னும் எட்டு மடங்கு மக்கள் இந்தச் சாதனங்களை வாங்குவார்கள்’ என்கிறது இந்த அறிக்கை.

சூழலியல் மாசு ஏற்படுத்தும் வாகனங்கள்!

சா
லைகளில் மாசு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க ஒரே வழி, அதிக மாசை உண்டாக்கும் வாகனங்களைக் கண்டறிந்து அகற்றுவதுதான். `இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாகனத்தைப் பயன்படுத்தக் கூடாது’ என்று சட்டப்படியான விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் மக்கள் மதிப்பதில்லை. எத்தனை ஆண்டுகளானாலும் வாகனங்களைத் தொடர்ந்து ஓட்டுகிறார்கள். அவை வெளிவிடும் புகையால் மாசு அதிகரிக்கிறது.

இந்தியா

இந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்காக டெல்லி நகர நிர்வாகம் `15 ஆண்டுகளான டீசல் கார்களை இனிமேல் டெல்லியில் ஓட்டக் கூடாது. மீறி ஓட்டினால், அவற்றை அரசாங்கம் பறிமுதல் செய்து அழித்துவிடும்’ என  கண்டிப்பான ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இத்துடன்,  வீடுகளில்  நிறுத்தப்பட்டிருக்கும் பழைய கார்களையும் கணக்கெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய வாகனங்களை அகற்றினால்தான் நகரக் காற்று சிறிதேனும் தூய்மையாகும்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்..!

ந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள்... அதாவது, 1,000 கோடிக்குமேல் சொத்து மதிப்புள்ளவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

சமீபத்தில் வெளியாகியுள்ள `பார்க்ளேஸ் ஹூரன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலின்’படி நம் நாட்டில் 831 பெரும்பணக்காரர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருக்கிறதாம். இவர்கள் அனைவருடைய சொத்தின் மொத்த மதிப்பு 719 பில்லியன் அமெரிக்க டாலர்கள்!

இந்தியா

இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர்,  முகேஷ் அம்பானி.  இவருடைய சொத்து மதிப்பு 3,71,000 கோடி ரூபாய்! இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூன்று பேருடைய சொத்துமதிப்பைக் கூட்டினாலும் அது முகேஷ் அம்பானியைவிடக் குறைவாகத்தான் இருக்கிறது. .

இந்தியாவின் பெரும்பாலான பணக்காரர்கள் (233 பேர்) மும்பையில் வசிக்கிறார்கள். அடுத்த இடத்தில் உள்ள நகரம் டெல்லி (163 பேர்).

போலி விருது ஜாக்கிரதை!

`வா
ழ்த்துகள், உங்களுடைய சேவைகளைப் பாராட்டி அரசாங்கம் உங்களுக்கு ஒரு விருது தரவிருக்கிறது. வரும் 18-ம் தேதி ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறும் விழாவில் அமைச்சர் விருதுகளை வழங்குவார்.’ டெல்லியின் புகழ்பெற்ற மருத்துவர்கள் சிலருக்கு இப்படியொரு மின்னஞ்சல் வந்தது. அவர்கள், மகிழ்ச்சியோடு எல்லோரிடமும் சொன்னார்கள்; விருது பெறத் தயாரானார்கள்.

சில நாள்கள் கழித்து, அரசாங்கத்திலிருந்து(?) ஒருவர் அவர்களைத் தொடர்புகொண்டார். ``உங்களுக்கு விருது வழங்குவது விஷயமாக ஊடகங்களுக்கு செய்தி தரணும். விழாவுக்கான செலவுகளும் நிறைய இருக்கு. இதுக்காக நீங்க கொஞ்சம் செலவுசெய்யவேண்டியிருக்கும்’’ என்றார்.

இந்தியா

விருது என்றால் சும்மாவா? அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்; கேட்ட பணத்தை அனுப்பிவைத்தார்கள்.

விழா நாள் வந்தது. எல்லாரும் ஆர்வத்துடன் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றார்கள். அங்கே விழாவும் இல்லை, அமைச்சரும் இல்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது.

இப்படிப் போலியான விருதுகளைத் தருவதாகச் சொல்லி பலரையும் ஏமாற்றிய ஒரு கும்பல், சமீபத்தில் டெல்லியில் பிடிபட்டிருக்கிறது.

- என். சொக்கன்

தெரியுமா?

இந்தியாவின் தேசிய மரம், ஆலமரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism